07/04/2019

மண் கவ்வி தர்த்தி பக்கட்


அரசியல் கட்சிகளைக் கலங்கடிக்கும் இன்றைய சுயேச்சைகளுக்கெல்லாம் முன்னோடி, போபால் துணி வியாபாரியான மோகன்லால். இந்திரா காந்தி, சரண்சிங், ராஜீவ் காந்தி, பி.வி.நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய் என்று ஐந்து பிரதமர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர் அவர். தேர்தல் நேரங்களில் தனக்குத் தானே மகுடமும் மாலையும் சூட்டிக்கொண்டு வீதிகளில் வலம் வருவார். அவர் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாமே டெபாசிட் இழந்தார். மண்ணைக் கவ்வுபவர் என்ற பொருளில் ‘தர்த்தி பக்கட்’ என்று பட்டப்பெயரும் வைத்துக்கொண்டார். ஆனால், அவர் தேர்தலில் போட்டியிட்டது வெறும் வேடிக்கைக்காக அல்ல.
‘இந்திய ஜனநாயகம் எல்லோரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறது என்பதைக் காட்டவே நான் தேர்தலில் நிற்கிறேன்’ என்று ஒரு பேட்டியில் பதிலளித்தார் மோகன்லால். ‘தர்த்தி பக்கட்’ என்ற பெயரில் மோகன்லால் தவிர காகா ஜோகீந்தர் சிங், நகர்மால் பஜோரியா ஆகியோரும் பிரபலம். 93 வயதாகும் பஜோரியா, இந்தத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

No comments:

Post a Comment