பல நாடுகளும் ஒதுக்கி வைத்த பன்னாட்டு மருந்து கம்பெனியை காரைக்காலில் அமைக்க உள்ளூர் அமைச்சர் அரிச்சந்திரன் (கரு. பழனியப்பன்) முயற்சி செய்கிறார். இதற்காக வரலாற்றுப் பின்னணி கொண்ட ஹாக்கி மைதானம் குறி வைக்கப்படுகிறது. இதைத் தடுக்க ஹாக்கி பயிற்சியாளர் (ஹரிஷ் உத்தமன்) போராடுகிறார். மைதானத்தை மீட்க வேண்டுமென்றால், அகில இந்திய ஹாக்கி போட்டியில் விளையாடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அப்போது அந்த ஊருக்கு வரும் பிரபாகரன் (ஹிப்ஹாப் ஆதி) ஹாக்கி விளையாடுவதைப் பார்த்து, தங்கள் அணிக்கு வருமாறு பயிற்சியாளர் அழைக்கிறார்.
ஹாக்கி விளையாட்டால், தனக்கு நேர்ந்த கதியைப் பற்றி சொல்லி முதலில் விளையாட மறுக்கிறார் ஆதி. ஆனால், அந்த மைதானத்தை மீட்க நடக்கும் போராட்டத்தைப் பார்த்து அவராகவே ஹாக்கி அணிக்கு வருகிறார். அவரால் ஹாக்கி அணி வெற்றி பெற்றதா, இல்லையா? ஹாக்கி மைதானம் மீட்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘நட்பே துணை’.
விளையாட்டையும் அரசியலையும் கலந்து எடுக்கப்பட்ட சமகால படங்களின் தொடர்ச்சியாக வந்திருக்கும் படம் இது. மிகவும் பார்த்து பரிட்சயமான கதைக்களம். அதில் மசாலாக்களைத் தூக்கலாகச் சேர்த்து உணர்வுபூர்வமகாத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு. அரசியல்வாதியும் கார்ப்பரேட் கிரிமனல்களும் சேர்ந்து ஒரு பழமையான ஹாக்கி மைதானத்தை ஸ்வாகா செய்ய நடத்தும் தகிடுதத்தங்களை கதையெங்கும் அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குநர். அதற்கு துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை தோலுரித்துகாட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், இந்தக் காட்சி அமைப்புகளில் புதுமையும் இல்லை; சுவாரசியமும் இல்லை.
இளைஞர்களை குறி வைத்து மட்டுமே படத்தை எடுத்திருக்கிறார்கள். எனவே, அவர்களைக் கவரும்விதமாகக் படமெங்கும் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் டிரெண்டிங்கான விஷயங்களைப் படம் முழுக்க படரவிட்டிருப்பதே அதற்கு சாட்சி. அதற்கு ஏற்றார்போல யூடியூப் சேனல் கலைஞர்களுக்குப் படத்திலும் காட்சியமைப்பிலும் முன்னுரிமை அளித்திருக்கிறார்கள். இவர்கள் அலப்பறையாலும் ஆதியின் காதல் சேட்டைகளாலும் சிரிக்கவே முடியாத காமெடிகளாலும் முதல் பாகம் கொஞ்சமும் விறுவிறுப்பில்லாமல் செல்கின்றன.
இரண்டாம் பாகத்தில்தான் கதைக்குரிய களத்தை அமைத்திருக்கிறார்கள். ஆனால், பார்த்து பார்த்து சலித்துபோன காட்சிகளால் திரைக்கதை அலுப்பூட்டுகிறது. மைதானத்தை மீட்க போராட்டம், அதை முறியடிக்க இனம், மொழி, மதம், சாதி ஆகியவற்றை தூண்டிவிடும் அரசியல்வாதி என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் ஈர்ப்பு இல்லாமல் வெறுமனே காட்சிகளாக நகர்கின்றன.
புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு சர்வதேச வீரரையே காரைக்காலில் உள்ள ஹாக்கி பயிற்சியாளருக்குத் தெரியாமல் இருப்பது போன்ற அபத்தங்களும் படத்தில் உள்ளன. கொஞ்சமும் உப்பு சப்பில்லாத ஹிப்ஹாப் ஆதியின் ஃபிளாஸ்பேக் காட்சிகள் படத்துக்கு வேகத்தடையாக அமைகின்றன. உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய கிளைமாக்ஸ் ஹாக்கி போட்டி காட்சியை ரன்னிங் ரேஸ் கணக்காக மாற்றிவிடுகிறார்கள். படத்தில் தொடர்ச்சியாக வரும் சில பாடல்களை கத்திரி போட்டிருக்கலாம். கடைசியில் எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; கெட்ட அரசியல்வாதிகளுக்கு காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது யார் என்று கேள்வியோடு சோஷியல் மெசேஜோடு படத்தை முடித்துவிடுகிறார்கள்.
தனக்கு என்ன வருமோ அதை மட்டுமே செய்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. அவ்வப்போது மாஸ் ஹீரோவாகக் காட்டப்படும் காட்சிகளிலும் பலவீனமாகவே தெரிகிறார். அவருடைய உடல்மொழியும் ஒத்துழைக்க மறுக்கின்றன. ஆனால், ஆதியின் ஏரியாவான ஆட்டம், பாட்டம் ஆகியவற்றில் மாஸ் காட்டியுள்ளார். நாயகியாக வரும் அனாகாவுக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. மோசடியான அரசியல்வாதியாக வரும் கரு. பழனியப்பன் அந்தக் கதாபாத்திரத்துக்குக் கச்சிதம். அரசியல்வாதிக்குரிய உடல்மொழியும் அவருடைய கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. சமகால அரசியலை கிண்டலடித்து சிரிக்க வைக்கிறார்.
விக்னேஷ்காந்த், எருமசாணி விஜய், ஷாரா என யூடியூப் பிரபலங்கள் படத்தில் அணிவகுத்துவருகிறார்கள். மைதானத்தை மீட்கப் போராடும் பயிற்சியாளர் வேடத்தில் ஹரீஸ் உத்தமன் நிறைவாகச் செய்திருக்கிறார். பாண்டியராஜன், கவுசல்யா போன்றோர் அவ்வப்போது வந்துசெல்கிறார்கள். படத்துக்கு இசையையும் ஹிப்ஹாப் ஆதி கவனித்திருக்கிறார். ஆத்தாடி என்ன உடம்பு, முரட்டு சிங்கிள் போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கின்றன.
நட்பே துணை - தலைப்பில் மட்டுமே.. மற்றபடி படத்தை நம்பி எடுத்த இளைஞர்களே படத்துக்கு துணை!
மதிப்பெண் 1.5 / 5

No comments:
Post a Comment