இந்தியாவில் குடியுரிமைத் திருத்த சட்டம் சரியா, தவறா என்ற பட்டிமன்றம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதுதொடர்பான விவாதங்களைத் தொடர்ந்து பார்த்துவந்த வேளையில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஹோலி பூம்’ என்ற கிரேக்கப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட இந்தப் படம், சட்ட விரோத குடியேற்றத்தால் பாதிக்கப்படும் ஓர் இளம் பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் மனிதத்துடன் கிரேக்க மூதாட்டி அணுகும் திரைக்கதைப் பிரதானமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கிரேக்கத் தலைநகர் ஏதென்ஸில் ஒரு குடியிருப்பு. அந்தக் குடியிருப்பில் தனி ஆளாக வசிக்கிறார் மூதாட்டி தாலியா. தரைத்தளத்தில் அல்பேனியாவிலிருந்து குடிபெயர்ந்த ஆடியா, தன் குழந்தையுடன் வசிக்கிறார். மூதாட்டியின் வீட்டுக்கு எதிரே நைஜீரிய இளைஞன் மனுவும் அவளுடைய கிரேக்கக் காதலி லெனாவும் வசிக்கிறார்கள். தனித்தனியாக இருக்கும் இவர்களை பிலிப்பைன்ஸிலிருந்து வந்து அப்பா, அம்மாவுடன் வசிக்கும் ஐஜ் என்ற விடலைப்பருவத்து வாலிபனின் செயல், ஒரு புள்ளியில் இணைக்கிறது.
ஐஜ் குறும்புத்தனமாக தபால் பெட்டியை வெடி வைத்து தகர்க்கிறான். இதில் அல்பேனியாவிலிருந்து ஆடியாவுக்கு வந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் எரிந்துவிடுகிறது. அதே தபால் பெட்டியில் நைஜீரிய இளைஞன் மனுவுக்கு வந்த போதைப் பொருள் பார்சல் நாசமாகிறது. சிறு வயதில் தொலைந்துபோன மூதாட்டி தாலியாவுக்கு பிள்ளையிடமிருந்து வந்த கடிதம் எரிந்துவிடுகிறது. இதனால், ஒவ்வொருவரும் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதுதான் ‘ஹோலி பூம்’ கதை.
நான்கு கிளைக் கதைகள் படத்தில் இருந்தாலும், அல்பேனியாவிலிருந்து கிரேக்கத்தில் குடியேறுபவர்களின் நிலையையும் கிரேக்க மக்களின் பார்வையையும் படம் அழுத்தமாகப் பேசுகிறது. அகதிகளாகவோ, பிழைக்கவோ வருவோர் வாங்கிய கடனைத் திரும்பி தராததால் பாஸ்போர்ட்டைப் பறித்துகொள்வது, உதவி என்ற பெயரில் பாலியல் நோக்கோடு ஆதரவற்ற பெண்களிடம் அணுகுவது என ஆதரவற்றவர்களைச் சுரண்டும் போக்கை இயக்குநர் மரியா லாஃபி தோலுரித்துக் காட்டியிருக்கிறார். இயக்குநர் மரியா லாஃபி, புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அவர்களுடைய வலிகளை அப்படியே இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.
குறிப்பாக தன் பிரச்னையிலிருந்து விடுபட குழந்தையை இரவில்
தூங்க வைத்துவிட்டு வேலைக்கு செல்கிறார் ஆடியா. கண் விழித்ததும் தன் அம்மா வரும்வரை அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. குழந்தையின் அழுக்குரல் கல் நெஞ்சையும் கரைய வைத்துவிடுகிறது. இந்தக் காட்சி குடியேறிகள் சந்திக்கும் பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்தப் படத்தில் வரும் மூதாட்டி தாலியாவின் பாத்திர வார்ப்பு இரு துருவமாக வார்க்கப்பட்டிருக்கிறது. நைஜீரிய இளைஞனைக் கண்டதும், அவருடைய பார்வையிலேயே நிற வெறியைக் காட்டிவிடுகிறார். ஆடியாவின் குழந்தையின் அழு குரல் கேட்கும்போதெல்லாம் திட்டித் தீர்க்கிறார். ‘சட்ட விரோதமா வந்துடுறாங்க. இவங்களோட இதே வேலையே போச்சு’ என்று கொதிக்கிறார். ஆனால், நைஜீரிய இளைஞன் பிரச்சினையில் சிக்கும்போது ஆதரவளித்து வீட்டில் அடைக்கலம் தருகிறார் மூதாட்டி தாலியா. ஆவணமின்றி தங்கியிருப்பதாக ஆடியாவை போலீஸ் பிடித்து சென்றுவிட, இரவில் அழுகும் குழந்தையின் சத்தம் கேட்டு மனம் கேட்காமல், நைஜீரிய இளைஞனின் உதவியுடன் வீட்டுக்குக் கொண்டு வந்து குழந்தையைப் பராமரிக்கிறார்.
இங்கேதான் இப்படம் மனிதத்தை உரக்கப் பேசுகிறது. நாடு, இனம், மொழி, கலாச்சாரம் என எல்லாவற்றையும் தாண்டி பிரச்சினையில் உள்ள மனிதர்களை மனிதநேயத்தோடு அணுகும் பார்வையை முன் வைக்கிறது படம். காகிதமாக இருக்கும் ஆவணங்கள் மனித வாழ்க்கையில் விளையாடும் விளையாட்டையும் இப்படம் பேசத் தவறவில்லை.
பல நாட்டு எல்லைகள் சூழ்ந்த நாடுகளில் புலம் பெயர்தல், சட்ட விரோத குடியேற்றங்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இப்பிரச்சினையை ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதத்தில் அணுகலாம். சட்ட விரோதக் குடியேறிகளை வெறுமனே பிரச்சினையாகக் கருதாமல், அவர்களுடையை பிரச்சினையப் பேசுவதுதான் காலத்தின் தேவை. அந்த வகையில் புலம்பெயர்வோர், சட்ட விரோத குடியேறிகளின் பிரச்சினைகளை மனிதநேயத்தோடு பேசியிருக்கிறது ‘ஹோலி பூம்’.
இந்து தமிழ், 10-01-2020

No comments:
Post a Comment