போலீஸ் அதிகாரியானன நாயகன் அக்னி (ராம் அருண் காஸ்ட்ரோ) இருட்டைக் கண்டாலே அதீதமாகப் பயப்படும் நோய் உள்ளவர். இதனாலேயே தடயவியல் துறைக்கு மாறிவிடுகிறார். ‘லிவிங் டூ கெத’ரில் வாழும் இளம் பெண் கொலை செய்யப்படுகிறாள். அந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் லூனா (விஷ்ணு பிரியா) தன் நண்பரான ராம் அருணின் உதவியை நாடுகிறார். அந்தப் பெண் யார், ஏன் கொலைசெய்யப்பட்டார், யார் கொலை செய்தது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘வி1 மர்டர் கேஸ்’.
க்ரைம் இன்வெஸ்டிகேஷன் கதையைச் சுவாரசியமாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநராக அறிமுகமாகியுள்ள பாவல் நவகீதன். படம் தொடங்கியவுடனே எங்கெங்கோ சுற்றாமல் நேராக கதைக்குள் அழைத்து சென்றுவிடுகிறார். சினிமாவில் காட்சியாக மட்டுமே வந்துசெல்லும் தடயவியல் துறை, குற்றங்களைக் கண்டுபிடிக்க எந்த அளவுக்கு உதவுகிறது என்று படமாக்கியிருக்கிறார் இயக்குநர். கொலைக்கான ஒவ்வொரு முடிச்சு அவிழ்வதும் அதை போலீஸ் நெருங்குவதும் என மர்ம முடிச்சுகள் அவிழ்வதில் புதுமை இல்லை என்றாலும் படத்தின் ஓட்டத்துக்கு துணை நிற்கின்றன. படத்தின் நாயகியை நாயகனின் தோழியாகக் காட்டியிருப்பதும் புதுமையான உத்தி.
ஆனால், க்ரைம் த்ரில்லர் படங்களுக்கே உரிய வேகமும் விறுவிறுப்பும் இல்லாமல் திரைக்கதை பயணிப்பது திகில் அனுபவத்தைக் கொடுக்க தவறிவிடுகிறது. டெம்பிளேட்டுகளாக நடைபெறும் விசாரணைக் காட்சிகள் டிராமாக்கள் போல் நகர்ந்துசெல்கின்றன. நாயகனை தடவியல் துறை அதிகாரியாக காட்டுவதா, போலீஸ் அதிகாரியாகக் காட்டுவதா என இயக்குநருக்கு ஏகக் குழப்பம். இரண்டையும் அவரே செய்கிறார். குற்றங்களைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு உதவும் துறைதான் தடயவியல் என்ற லாஜிக்கையே உடைத்துவிடுகிறார் இயக்குநர்.
உயரதிகாரி சொல்லும் பணியை நாயகன் செய்யாமல் இருப்பது,
அவரையே எதிர்த்து கேள்வி கேட்பது எனக் காவல்/தடயவியல் துறையின் நிஜ வாழ்க்கைக்கு மாறான காட்சிகளும் வந்து செல்கின்றன. நாயகன் ஏன் இருட்டைக் கண்டு பயப்படுகிறார் என்ற பின்னணிக் காட்சிகள் நம்பும்படியாகப் படமாக்கப்படவில்லை. காவல் துறை விசாரணைக்கு வருபவர், மேசையில் தாளம் போட்டுக் கொண்டும் போலீஸை கிண்டல் அடித்துக்கொண்டும் பேசுவதாகக் காட்டுவது இயக்குநரின் மிகையான கற்பனை. அந்தக் காட்சிகளும் அந்தக் கதாபாத்திரமும் எரிச்சலூட்டிவிடுகிறது.

படத்தின் கிளைமாக்ஸில் ட்விஸ்ட் ஒன்றை இயக்குநர் வைத்திருக்கிறார். அது ஊகிக்க முடியாத ட்விஸ்ட் என்றாலும், ஊதி பெருக்கப்பட்ட பலூனை ஊசியைக் கொண்டு குத்திவிடுவது போன்ற தோற்றத்தை படம் ஏற்படுத்திவிடுகிறது. குறிப்பாக, நாயகன் பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் க்ரைம் படத்துக்கு தேவையில்லாத ஆனி.
நாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்திருக்கிறார். இரவைக் கண்டால் பயப்படும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். விசாரணையை கேஷுவலாக மேற்கொள்வதிலும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். ஆனால், அவருடைய உடல்மொழி ஒத்துழைக்க மறுப்பது மைனஸ். நாயகியாக வரும் விஷ்ணு பிரியாவும் நிறைவாகச் செய்திருக்கிறார். போலீஸ் உடையில் வராமல், கலர்ஃபுல்லாகவே வருகிறார். மலையாளம் கலந்து அவருடைய பின்னணிக் குரல், மனதோடு ஒன்றிபோகாமல் துருத்தி நிற்கிறது. கொலையாகும் 'பேரழகி' காயத்திரி, விசாரணையில் அலம்பல் செய்யும் லிங்கேஷ், ஒரு நிமிடம் வந்துபோகும் மைம் கோபி, ‘லிவிங் டூ கெதர்’ காதலர் லிஜேஷ் எனப் பலரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால், க்ரைம் படத்துக்கே உரிய பின்னணி இசையும் எடுபடவில்லை. அதில் இசையமைப்பாளர் ரோனி ரபெல் கவனம் செலுத்தியிருக்கலாம். க்ரைம் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவை கிருஷ்ண சேகர் வழங்கியிருக்கிறார்.
விறுவிறுப்பில்லாத திரைக்கதையால் ‘வி1 மர்டர் கேஸ்’ தள்ளாடுகிறது.
மதிப்பெண் - 2 / 5

No comments:
Post a Comment