ஆக்ஷன், டான், அதிரடி எனக் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல போய் கொண்டிருந்த ரஜினிக்கு ‘தேவதாஸ்’ அரிதாரத்தையும் பூச வைத்தது ஒரு படம். அதுதான், ‘புதுக்கவிதை’.
கவிதாலயா தயாரிப்பில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் 1982-ம் ஆண்டில் வெளி வந்த படம் இது. பணக்கார வீட்டுப் பெண் ஜோதியுடனான பைக் ரேஸர் ரஜினியின் அறிமுகமே மோதலில் தொடங்கும். ரஜினியை இன்னொரு கதாபாத்திரம் திட்டுவதைகூட ஏற்றுகொள்ள ரசிகர்கள் மறுத்த காலம் உண்டு. ஆனால், புதுக்கவிதைப் படத்தில் ‘கருப்பன்.. கருப்பன்..’ என்று நாயகி திட்டும் காட்சிகள் பல இடங்களில் வரும். இருவரும் காதலில் விழுந்த பிறகு காதலைப் பிரிக்க ஜோதியின் அம்மா சுகுமாரி வில்லியாக மாறுவார்.
ஹீரோயிசத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உண்மையில் ஒரு பெண்ணும் ஆணும் காதலித்தால், வீட்டில் எப்படி எதிர்ப்பு கிளம்பும் என்ற அடிப்படையை மட்டும் உள்வாங்கி இதில் ரஜினி நடித்திருப்பார். காதலியைப் பிரியும் தருணத்திலும், பிரிந்த பின் ஏங்கி தவிக்கும் தருணத்திலும் ரஜினியின் ஹீரோயிசம் எங்கே என்று தேட வைக்கும்.
காதலை மறக்க முடியாமல் அதன் ஆற்றாமையாக தாடியுடன் ரஜினி வரும் காட்சியும், சோகத்தையும் இயலாமையையும்
மறைக்க முடியாமல் தவிக்கும் காட்சிகளும் படத்தின் பின்பாதியை ஆக்கிரமித்திருக்கும். மீண்டும் காதலியைச் சந்திக்கும் நிமிடத்திலும், காதலின் வலியை இயல்பாக ரஜினி வெளிப்படுத்தியிருப்பார்.
பல ஆண்டுகள் கழித்து பழைய காதலியை ரஜினி சந்தித்து பேசிய பிறகு, “நான் போட்டுமா” என்று ஜோதி கேட்பார். அதற்கு ரஜினி, “அதான் போய்ட்டியே” என்று ஒரே வார்த்தையில் காதலின் ஏமாற்றத்தையும் வேதனையையும் இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
எப்போதுமே ரஜினி படத்தில் காதல் என்பது ஒரு சிறுபகுதிதான். அதுவும் டூயட் பாடுவதற்கான ஒரு பகுதி மட்டுமே. ஆனால், முழுக்க முழுக்க காதலையே மையமாக வைத்து ரஜினி நடித்த முதலும் கடைசியுமான காதல் படம் ‘புதுக்கவிதை’ மட்டுமே.
தி இந்து, 13-02-2015

No comments:
Post a Comment