புத்தாயிரத்துக்கு முன்புவரை வெளிநாட்டு வீராங்கனைகள் கோலோச்சும் விளையாட்டில் ஒன்றாகத்தான் இருந்தது பாட்மிண்டன். அந்த விளையாட்டில் இந்திய வீராங்கனைகளும் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் சாய்னா நேவால். உலக பாட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்கனை; ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை; உலக பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என பாட்மிண்டனில் சாய்னா பதித்தத் தடங்கள் அழுத்தமானவை.
முதல் முயற்சி
சாய்னா பிறந்தது ஹரியாணா என்றாலும், வளர்ந்து ஆளானது எல்லாம் ஹைதராபாத்தில்தான். சாய்னாவின் அப்பா ஹர்வீர் சிங்கும் அம்மா உஷா ராணியும் பாட்மிண்டன் விளையாட்டில் மாநில அளவில் விளையாடியவர்கள். தங்களது மகள் சாய்னாவை பாட்மிண்டன் விளையாட்டில் தேசிய அளவில் முன்னேற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். ஹதராபாத்துக்கு வந்த பிறகு அங்கே சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடுவதில் சாய்னாவுக்கு மொழி தடையாக இருந்தது. சாய்னாவுக்கு அவரது அம்மாதான் பாட்மிண்டன் விளையாட்டைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், முறையான பயிற்சி இருந்தால்தான் பெரிய இலக்கை அடைய முடியும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
அப்போது ஹைதராபாத்தில் நானி பிரசாத், கோவர்தன் ரெட்டி ஆகியோர் நடத்தும் பாட்மிண்டன் பயிற்சியில் சாய்னாவை சேர்க்க அவருடைய பெற்றோர் விரும்பினார்கள். பயிற்சி முகாமில் ஆட்கள் சேர்க்கை முடிந்த நிலையில் சாய்னா வந்ததால், அவரைப் பயிற்சியில் சேர்க்க பயிற்சியாளர்கள் மறுத்துவிட்டார்கள். நீண்ட கோரிக்கைக்குப் பிறகு சாய்னாவை சேர்க்கப் பயிற்சியாளர்கள் சம்மதித்தார்கள். ஆனால், அதற்கு முன்பு பாட்மிண்டன் விளையாட்டை விளையாடி காட்ட வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். அதற்கு முன்புவரை பாட்மிண்டன் விளையாட்டை ஆத்மார்த்தமாக சாய்னா விளையாடியதில்லை. இருந்தாலும் மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ராக்கெட்டைப் பிடித்து விளையாடினார் சாய்னா. பாட்மிண்டன் விளையாட்டை அவர் இயல்பாக விளையாடியவிதம் பயிற்சியாளர்களுக்குப் பிடித்துபோனது.
உழைப்போ உழைப்பு
ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் பாட்மிண்டன் விளையாட்டு
பயிற்சி என சாய்னாவுக்கு சுமை கூடியது. அதிகாலையில் எழுந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பயிற்சி முகாமுக்கு செல்ல வேண்டும்; பயிற்சியை முடித்த பிறகு பள்ளிக்கு செல்ல வேண்டும்; வீட்டுக்கு வந்த பிறகு பெற்றோருடன் பாட்மிண்டன் விளையாட்டு எனத் தினமும் ஓர் இயந்திரம்போல உழைக்கத் தொடங்கினார் சாய்னா. அந்த வயதில் பாட்மிண்டன் விளையாட்டில் அவர் காட்டிய ஈடுபாடு, உழைப்பு, விடாமுயற்சி போன்றவைதான் சாய்னாவை பின்னாளில் உலகம் போற்றும் பாட்மிண்டன் வீராங்கனையாக்கியது.
குறுகிய காலத்திலேயே பாட்மிண்டன் வீராங்கனையாக உருவெடுத்த சாய்னா தேசிய அளவில் காலடி எடுத்து வைத்தது 2002-ம் ஆண்டில். 13 வயதுக்குட்பட்ட தேசிய சப் ஜூனியர் பாட்மிண்டன் விளையாட்டில் முதன் முறையாக பட்டம் வென்றார். அப்போது அவருக்கு 12 வயது. பின்னர் 16 வயது, 19 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் எல்லாம் தனது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்திய சாய்னா, தேசிய அளவில் நம்பர் ஒன் வீராங்கனையாக உருவெடுத்தார். இதன் பிறகு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 2006-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 4 ஸ்டார் கோப்பைக்கான போட்டிதான் அவர் பங்கேற்ற முதல் சர்வதேச தொடர். அந்தப் போட்டியில் 16 வயதான சாய்னா சாம்பியன் பட்டம் வென்றார். இந்தப் பட்டத்தை வென்ற ஆசியாவின் இளம் பெண் என்ற சாதனையை சாய்னா படைத்தார்.
வெற்றிக் காற்று
சர்வதேச அளவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவந்த சாய்னா, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். காலிறுதிவரை முன்னேறிய சாய்னா தோல்வியடைந்தாலும், ஒலிம்பிக்கில் அந்த நிலைவரை முன்னெறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையைப் படைத்தார். ஆனால், ஒலிம்பிக் போட்டி தோல்விக்கு பிறகு சாய்னாவின் பக்கம் வெற்றிக் காற்று வீச ஆரம்பித்தது. சீன தைபே ஓபன், இந்தோனேஷியா ஓபன் ஆகிய தொடர்களில் பட்டம் வென்று அசத்திய சாய்னா, 2009-ம் ஆண்டில் பி.டபுள்யு.எஃப். சூப்பர் சீரிஸில் பட்டம் வென்று வெற்றிக் கொடியை உயரப் பறக்கவிட்டார். இந்த சூப்பர் சீரிஸை வென்ற முதல் இந்திய பெண் என்ற அழியா தடத்தைப் பதித்தார் சாய்னா.
2010-ம் ஆண்டு முழுவதும் பாட்மிண்டன் விளையாட்டில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்தார். இந்த ஆண்டில் மட்டும் இங்கிலாந்து சூப்பர் சீரிஸ், இந்திய ஓபன், சிங்கப்பூர் ஓபன், பி.டபுள்யு.எஃப் சூப்பர் சீரிஸ், உலக பி.டபுள்யு.எஃப். சீரிஸ் என அடைமழையாகக் கொட்டியது வெற்றி. 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சிறப்பும் அவருக்குக் கிடைத்தது.
ஒலிம்பிக் முத்திரை
ஆசியாவில் சீனா, மலேசியா போன்ற வீராங்கனைகள் மட்டுமே ஜொலித்த இந்த விளையாட்டில் சாய்னாவும் ஜொலிக்கத் தொடங்கினார். உச்சகட்டமாக இந்தக் காலகட்டத்தில் உலக
தரவரிசையில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். 2011-ல் வெற்றி மாலையைக் கோத்த சாய்னா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 2012 லண்டன் ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், அரையிறுதிவரை முன்னேறிய சாய்னா, எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தார். இதன்மூலம் அவரால் வெண்கலப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் இந்தியப் பெண், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
பாட்மிண்டன் விளையாடத் தொடங்கியதிலிருந்தே சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது சாய்னாவின் தனியாத தாகம். இந்த லட்சியம் 2015-ம் ஆண்டில் கைகூடியது. அந்த ஆண்டு ‘ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்’ போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெயரை எடுத்த சாய்னா, பட்டத்தையும் வென்று பெரும் புகழை ஈட்டினார். அதே ஆண்டு இந்திய ஓபன் பட்டத்தையும் சாய்னா வென்ற பிறகு, சர்வதேச தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சதனையையும் படைத்தார்.
வழிகாட்டி வீராங்கனை
ஒலிம்பிக் (ஒரு பதக்கம்), காமன்வெல்த் (5 பதக்கம்), ஆசிய விளையாட்டுப் போட்டி (2 பதக்கம்), ஆசிய சாம்பியன்ஷிப் (3 பதக்கம்), உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் (2 பதக்கம்) என எல்லாப் பெரிய தொடர்களிலும் சாய்னா ஜொலித்திருக்கிறார். பாட்மிண்டன் விளையாட்டில் சாய்னா செய்த சாதனைகளைப் பாராட்டி 2009-ல் ஆண்டில் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. 2010-ல் பத்மஸ்ரீ விருதும், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் அறிவிக்கப்பட்ட அவர், 2016-ம் ஆண்டில் பத்மபூஷண் விருதையும் பெற்றார். 2008-ம் ஆண்டில் நம்பிக்கைக்குரிய வீராங்கனை என விருதை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வழங்கியது அவரது பாட்மிண்டன் பயணத்தில் முத்தாய்ப்பானது.
சாய்னா நேவால் பாட்மிண்டன் துறையில் ஜொலிக்கத் தொடங்கிய பிறகுதான் இந்திய பாட்மிண்டன் மீதும் புகழின் வெளிச்சம் பரவத் தொடங்கியது. சாய்னாவின் பிரமிக்கத்தக்க வெற்றியைப் பார்த்து ஏராளமான இந்திய இளம் பெண்களும் குழந்தைகளும் பாட்மிண்டன் விளையாட்டில் காலடி எடுத்தவைத்தவண்ணம் உள்ளனர். சாய்னா இந்த விளையாட்டில் குறைந்தபட்சம் தேசிய அளவில் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று மட்டுமே சாய்னாவின் பெற்றோர் நினைத்தார்கள். ஆனால், அதையும் தாண்டி சர்வதேச அளவில் தன் பெயரை உச்சரிக்க வைத்த சாய்னாவின் வெற்றியின் மந்திரமாக இருந்தது, அவருடைய அர்ப்பணிப்பும் மன உறுதியும்தான்.
Hindu tamil, 23/12/2018

No comments:
Post a Comment