வில்லன், அரசியல்வாதி, குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை பொருத்திக்கொள்ளும் அற்புதமான கலைஞர் நடிகர் பாலா சிங். அண்மையில் வெளியான ‘என்.ஜி.கே.’ படத்திலும் தன்னுடைய முத்திரை நடிப்பை வழங்கியிருந்தார். கெட்டப் மாற்றாமல், நடிப்பில் கெட்டிக்காரத்தனத்தைப் பின்பற்றிவரும் நடிகர் இவர்.
பாலா சிங்கின் சொந்தஊர் நாகர்கோவிலில் உள்ள அம்சிக்காகுழி என்ற குக்கிராமம். படிக்கிற காலத்திலிருந்தே நாடகங்கள் மீது பாலா சிங்குக்கு ஈர்ப்பு. நாகர்கோவிலில் கோயில்கள், சர்ச்சுகளில் நாடகங்கள் போடுவது என பாலா இருந்திருக்கிறார். கல்லூரி நாட்களிலும் நாடகங்கள் என்றால் அவருடைய உயிர். பிறகு ‘செயின்ட் சேவியர் ஆர்ட்ஸ் கிளப்’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவில் பாலா சிங் இயங்கினார். அந்தக் குழுவின் மூலம் அவர் மேடை ஏறாத நாடகங்களே இல்லை. அப்படியே வெளியூர்களிலும் நாடகங்களுக்காகப் பயணமானார்.
அப்படித்தான் தலைநகர் சென்னைக்குள் 1980-களின் தொடக்கத்தில் வந்தார் பாலா. சென்னைக்கு வந்தவுடன் பரிக்ஷா நாடகக் குழுவில் இணைந்து நாடகங்களில் பங்கேற்றார். ஞானி, டாக்டர் ருத்ரன் என பலருடைய நாடகக் குழுக்களிலும் விழிப்புணர்வு நாடகங்களில் நடித்திருக்கிறார். சென்னையில் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் சினிமாவிலும் வாய்ப்புத் தேடினார்.
அந்தக் கால ஆதர்சன இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ் தொடங்கி சினிமா வாய்ப்புத் தேடி ஏறி இறங்காத இயக்குநர்களின் வீடுகளே கிடையாது. ஆனால், ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது. வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மனம் தளரவில்லை. சென்னையில் வாழ்க்கையை நகர்த்துவதற்கும் ஆள் இல்லை; கைத்துக்கிவிடவும் ஆள் இல்லை என்ற நிலையில், சினிமாவுக்கு அலைந்து திரிந்து பாலாவின் உடலும் தளர்ந்துபோயிருந்தது.
“சினிமாவுக்கு அழகு பார்த்த காலம் அது. பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தால்தான் வாய்ப்பே கிடைக்கும். அலைந்து, திரிந்து ஓடாகிபோனதில் இருந்த உடற் தோற்றமும் சீர்குலைந்து போயிருந்தது. பசிக்கும் கஷ்டத்துக்கும் நடுவே சினிமாவில் எப்படியும் நடித்துவிடுவது என்ற வைராக்கியம் இருந்தது.
நீண்ட தேடுதலுக்கு பிறகு 1982-ல் மெளலி இயக்கிய ‘வா இந்த பக்கம்’ என்ற படத்தில் முதன் முதலாக சிறு வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு ‘ஏழாவது மனிதன்’ படத்தில் ஒரு கம்யூனிவசாவதியாக நடித்தேன். தொடக்கக் காலத்தில் விழிப்புணர்வு குழுக்களில் நடித்துக்கொண்டிருந்ததால், கமர்சியலுக்கு தேரமாட்டேன் என்று என்னை முத்திரை குத்திவிட்டார்கள். அதன்பிறகும் தேடல்கள் தொடர்ந்தன.” என்று சினிமாவில் நுழைய எடுத்த முயற்சிகளை ஒரு கதையைப் போல சொல்கிறார் பாலா சிங்.
இதன்பிறகு யூகிசேதுவிடம் உதவி இயக்குநராகப் பணி, சினிமா புரொடக்ஷன் மேனஜர் என சினிமாவே தன்னுடைய வாழ்க்கையாக மாற்றிக்கொண்டுவிட்டார். “சினிமாவுக்குள் ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தாதான், சாதிக்க முடியும் என்று அதிலேயே புழங்கிக்கொண்டிருந்தேன். இதனால், நட்பு வட்டம் பெருகியது. அப்போதுதான் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனாலும், தமிழில் தேடுதல்கள் நிற்கவில்லை. ஒரு வழியாக 1993-ல் நடிகர் நாசர் இயக்கிய ‘அவதாரம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் பாலா சிங்குக்கு பெயரை மட்டும் பெற்று தரவில்லை. நல்ல நடிகர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது. தனி கவனமும் கிடைத்தது” என்கிறார் பாலா சிங்.
நடிகர் நாசர் எப்படி உங்களை எப்படி இந்தப் படத்துக்குள் கொண்டுவந்தார்? “டாக்டர் ருத்ரன் இயக்கத்தில் ‘அவுரங்கசீப்’ என்ற நாடகத்தில் நானும் நாசரும் நடிச்சோம். நாசர் அவுரங்கசீப்பாக நடித்தார். அவுரங்கசீப் தம்பி வேடத்தில் நான் நடிச்சேன். அப்போது முதல் நாசருடன் பழக்கம். நான் படம் எடுக்கும்போது வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லியிருந்தார். அதன்படியே வாய்ப்பு கொடுத்தார். அப்படித்தான் ‘அவதாரம்’ படத்துக்குள் வந்தேன். ’அவதாரம்’ படத்தைத் தொடர்ந்துதான் ‘ராசி’, ‘இந்தியன்’, ‘பொற்காலம்’, 'ஆனந்த பூங்காற்றே’ என நல்ல படங்கள் அமைந்தன.” என்கிறார் பாலா சிங்.
குணச்சித்திரம், வில்லன் என ஒரே நேரத்தில் இரட்டைச் சவாரி செய்துவருகிறார் பாலாசிங். ஆனால், வில்லனாக நடிக்க வேண்டும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்கிறார் பாலா. முழு வில்லனாக நடிப்பதைவிட வில்லனுக்கு சப்போர்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெயரெடுப்பது மிகவும் கஷ்டம். ஆனால், ஏராளமான படங்களில் சப்போர்டிவ் வில்லனாக நடித்து பெயரெடுத்தவர் பாலாசிங். அந்த வரிசையில் ‘புதுப்பேட்டை’, ‘சாமி’ உள்பட பல்வேறு படங்கள் அவருக்கு பெயர் பெற்றுக்கொடுத்தன. ஆனாலும், தமிழ் சினிமாவில் கமர்சியல் ரீதியாக வெற்றி பெறுபவர்களுக்கே மரியாதை கிடைக்கிறது என்று வருத்தப்படுகிறார் பாலா சிங்.
“தமிழ் சினிமாவில் என்னத்தான் பெர்ஃபார்மென்ஸ் செய்தாலும் மரியாதை கிடைத்துவிடாது. 100 நாள் படத்தில் யார் நடித்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் பெயர் கிடைக்குது. ஓடாத படத்தில் மிகவும் நன்றாக நடித்திருந்தாலும் மறந்துவிடுவார்கள். நல்ல படம் சென்னையைத் தாண்டி செங்கல்பட்டுக்குக்கூட போகாது. ‘வண்ணத்துப்பூச்சி’ என்ற ஒரு படத்தில் நடித்தேன். தாத்தாவுக்கும் பேத்திக்குமான ஆழமான உறவைச் சொல்லும் ஓர் உணர்வுப்பூர்வமான படம். ஆனால், அந்தப் படம் சென்னையில் ரிலீஸானபோது தியேட்டருக்கு என்னை அழைத்தார்கள். அந்தப் படத்தை பார்க்க ஒரு ஆள்கூட வரல. இதுதான் தமிழ் சினிமாவின் யதார்த்தம்.” என்கிறார் பாலாசிங்.
அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்றால், அதில் பாலாவுக்கு எப்போதுமே ஓரிடம் இருக்கும். அண்மையில் வெளியான ‘என்.ஜி.கே.’ படத்திலும் அரசியல்வாதியாக பாலா சிங் அக்மார்க் நடிப்பை வழங்கியிருந்தார். நெகட்டிவ் அரசியல்வாதி கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திவிடுவார். அரசியல்வாதி வேடம் தொடர்ந்து கிடைக்க என்ன காரணம்?
“அந்தக் கதாபாத்திர வாய்ப்பு கிடைக்க என்ன காரணம்ணு எனக்குத் தெரியல. அந்தக் கதாபாத்திரத்துல இயல்பா பொருந்துவது காரணமா இருக்கலாம். காலையிலிருந்து இரவுவரை அரசியல்வாதிகள் செய்யும் சேட்டைகளை டி.வி.யில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அவையெல்லாம் மனத்தில் ஏறிகொண்டே இருக்குது. அதை உள்வாங்கி அப்படியே சினிமாவில் நடிப்பதும் காரணமா இருக்கலாம்” என்கிறார் பாலாசிங்.
சினிமாவுக்கு தன்னுடன் சேர்ந்து வாய்ப்பு தேடிய பலரும் வாழ்க்கையை இழந்து, பிழைப்பை இழந்து அப்படியே போய்விட்டதாகக் கூறும் பாலா சிங், “சோறு இல்லாமல், கையில் காசு இல்லாமல், தங்க இடம் இல்லாமல் சினிமாவுல வாய்ப்பு கிடைச்சதே பெரிய விஷயம். அதை இப்போ வரைக்கும் தக்கவைச்சிருப்பது அதைவிட பெரிய விஷயம். இப்போதுவரை சினிமாவில் இயங்கிக்கொண்டிருப்பது மனதுக்கு மன நிறைவைக் கொடுக்குது.” என்று அழுத்தமாகச் சொல்கிறார் பாலா சிங்.
கேள்வி - பதில்
செல்வராகவன்?
நாசருக்கு பிறகு என்னை செதுக்கிய இயக்குநர்.
ஆசை?
வாய்ப்பு கிடைக்கிற வரை நடிக்க வேண்டும்.
விருது?
கருணாநிதி கையால் வாங்கிய கலைமாமணி.
மறக்க முடியாத பாராட்டு?
‘தென்பாண்டி சிங்கம்’ பார்த்துவிட்டு கருணாநிதி அழைத்து பாராட்டியது.
அடுத்த படங்கள்?
சாந்தகுமார் இயக்கும் ‘மகாமுனி’, சமுத்திரகனியின் ‘சங்கத்தலைவன்’.
- இந்து தமிழ், 14/06/2019

No comments:
Post a Comment