சினிமா இயக்கத் துடித்துக்கொண்டிருக்கும் மதியழகன் (அருள்நிதி) சக சினிமா நண்பர்கள் ஒரு பப்பில் வழங்கும் மது விருந்தில் பங்கேற்கிறார். அதே பப்புக்கு எழுத்தாளரான மலர்விழியும் (ஷரத்தா ஸ்ரீநாத்) வருகிறார். அங்கே இருவருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. குடிப்போதையில் அருள்நிதி ஷரத்தா வீட்டுக்குச் செல்கிறார். காலையில் விடிந்து பார்க்கும்போது அருள்நிதி ஒரு சேரில் கட்டப்பட்டு கிடக்கிறார். அருகே ஷரத்தா கையில் ரத்தக் காயத்துடன் இறந்துக்கிடக்கிறார்.
எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டதாக நினைக்கும் அருள்நிதி அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அங்கிருந்து நகர முடியாமல் சூழ்நிலைகள் அவரை அங்கேயே கட்டிப்போடுகிறது. இதன்பிறகு அருள்நிதி அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா, ஷரத்தா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா, அருள்நிதியின் சினிமா கனவு என்ன ஆனது போன்ற கேள்விகளுக்கு ‘K-13’- விடை சொல்கிறது.
K-13 என்ற அடுக்குமாடி வீட்டில் ஒரு நாளில் நடக்கும் மரணத்தைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்தப் படம். மிகவும் ஆர்வமுள்ள ஒரு விஷயத்தின் மீது படைப்பாளிக்கு ஏற்படும் ஆழமான ஈடுபாடு என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை உளவியல் ரீதியாக சொல்ல முனைந்திருக்கிறது இப்படம். முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணின் வீட்டுக்கு வந்து சிக்கலில் நாயகன் மாட்டிக்கொள்வதிலிருந்து, அவர் எப்படி இறந்தார், அருள்நிதியை யார் கட்டிப்போட்டது போன்ற கேள்விகள் நாயகனைபோல பார்வையாளர்களுக்கும் தொற்றிக்கொள்கிறது.
அதற்கேற்ப அங்கிருந்து தப்பித்து செல்ல தடயங்களையும் கைரேகைகளையும் நாயகன் அழிப்பது என த்ரில்லருக்கான அம்சங்களுடன் கதை பயணிக்கத் தொடங்குகிறது. பக்கத்தில் பிணத்தை வைத்துக்கொண்டு நாயகன் அடையும் பதற்றத்தைப் பார்வையாளர்களுக்கும் அப்படியே கடத்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பரத் நீலகண்டன். ஆனால், நான் லீனியர் பாணியில் முன்னும் பின்னுமாகக் காட்டப்படும் காட்சிகளால் த்ரில்லருக்கான விறுவிறுப்பு குறைந்துவிடுகிறது.
இரண்டாம் பாகத்தில்தான் திரைக்கதைக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால், முதல் பாகத்தில் காட்டிய காட்சிகளுக்கு நியாயத்துடன் கட்டமைக்கப்பட்ட காட்சிகளைக் காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவை எல்லாமே துரித கதியில் மேலோட்டமாகக் காட்டப்படுவதால் மனதில் ஒட்டாமலேயே போய்விடுகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அருள்நிதியை ஷரத்தா ஏன் பின்தொடர்கிறார் என்பதற்கு நியாயமான காரணங்கள் சொல்லப்படவில்லை. தப்பிக்க வாய்ப்பிருந்தும் நாயகன் அங்கே இருந்த
செல்ல முடியாததற்கு சொல்லப்படும் காரணங்களிலும் வலுவில்லை.
த்ரில்லர் படங்களை குழப்பம் இல்லாமல் எடுப்பது பெரும் கலை. ஆனால், அதில் இயக்குநரின் கைவண்ணம் சீட்டுக்கட்டாய் சரிகிறது. படத்தில் குழப்பமாகத் திரியும் நாயகனைபோலவே பார்வையாளர்களும் காட்சிகளை குழப்பத்துடனேயே பார்க்கும்படி படமாக்கியிருப்பது இரண்டாம் பாகத்தில் படத்தின் அடிநாதத்தையே குலைத்துவிடுகிறது. அதோடு படத்தின் முடிவில் அருள்நிதி யார் என்ற ஒரு திருப்பத்தை இயக்குநர் சொல்கிறார். படத்துக்குள் படமாகக் காட்டப்படும் அந்தத் திருப்பத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பே படம் முடிந்துவிடுவதும் பெரும் குறை.
சினிமா எடுக்க 10 ஆண்டுகளாக கனவு காணும் இளைஞனின் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் அருள்நிதி. படம் முழுவதும் மப்பும் பதற்றமும் பீதியுமாக இருக்கிறார். அதைத் தாண்டி அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. முதல் பாகம் முழுவதும் பிணமாக நடித்திருக்கிறார் ஷரத்தா. இரண்டாம் பாகத்தில் மட்டுமே எமஷனலோடு நடிக்க முயற்சித்திருக்கிறார். கொரியர் டெலிவரி மேனாக ஒரே காட்சியில் வரும் யோகிபாபு, இந்தப் படத்தில் ஏன் நடித்தார் எனத் தெரியவில்லை. ஷரத்தாவின் தோழியாக வரும் காயத்ரியின் பாத்திரவார்ப்பில் முக்கியத்துவம் இல்லை. ‘எரும சாணி’ விஜய், ரமேஷ் திலக் ஆகியோர் கதையோட்டத்தோடு காணாமல் போய்விடுகிறார்கள்.
படத்தின் பலம் சாம் சி.எஸ்.ஸின் இசைதான். த்ரில்லர் படத்துக்கே உரிய பின்னனி இசையை வழங்கியிருக்கிறார். வீட்டைச் சுற்றிச் சுற்றிக் காட்டும் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவுக்கு பெரிய வேலை இல்லை. ரூபணின் படத்தொகுப்பில் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்.
கதைக்காக எந்த எல்லைக்கும் படைப்பாளி செல்லலாம் எனப் படத்தில் ஒரு வசனம் வரும். படம் சொல்ல வந்த சங்கதி அதுதான். ஆனால், அதை அழகாகப் படமாக்க படைப்பாளி இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
மதிப்பெண் 2.5 / 5

No comments:
Post a Comment