அந்தக் காலத்தில் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியாது. ஆனால், இன்றோ நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்ற அடையாளம் சிலருக்கு மட்டுமே உள்ளது. அந்த அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் இளங்கோ குமாரவேல்.
‘தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பதத்துக்குப் பொருத்தமானவர். சுமார் 20 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் குணச்சித்திரப் பாத்திரங்களில் கோலோச்சிவரும் அவரை சந்தித்த உரையாடலின் ஒரு பகுதி.
சென்னைதான் இளங்கோ குமாரவேலின் பூர்வீகம். அவருடைய தாத்தா டாக்டர் ராசமாணிக்கம் ஒரு தமிழறிஞர். தந்தை இளங்கோ தமிழ் ஆசிரியர். அம்மா புனிதவதி இளங்கோவன் ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர். தமிழ் மனம் வீசும் குடும்பம். பெரிய குடும்ப பின்னணியோடு வந்த குமாரவேல், நாடகக் கலையைத் தன் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தார்.
1980-களின் இறுதியில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இந்திரா பார்த்தசாரதி துறைத் தலைவராக இருந்த ‘ஸ்கூல் ஆஃப் டிராமா’வில் முதுகலை படித்தவர் குமாரவேல். பிறகு ந. முத்துச்சாமியின் கூத்துப்பட்டறையிலும் பாடம் படித்தார். இந்த இரு இடங்களில்தான் உலக நாடகங்களையும் தமிழ் மரபுக் கலைகளையும் கற்றுக்கொண்டார் குமாரவேல்.
நாடகம் மீதிருந்த தனியாதக் காதலால் ‘மேஜிக் லான்டர்ன்’ என்ற நாடகக் குழுவைக் குமாரவேல் தொடங்கினார்.
குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கில நாடகங்களைக் கற்றுத் தருவது, நாடகங்களுக்குக் கதை எழுதுவது, அதில் நடிப்பது என இருந்தார். அந்த வகையில் 1999-ம் ஆண்டில் சென்னை ஒய்.எம்.சி.ஏ.வில் முதன் முறையாக ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நாடகமாக்கினார். பொதுவாக நாடக
முயற்சிகளை கவனிக்கக்கூடியவர் நடிகர் நாசர். அந்த நாடகத்தில் கரிகாலனாக நாசர் நடித்தார். அதன்மூலமாக அவரோடு குமாரவேலுக்கு நட்பு ஏற்பட்டது. நாசர் மூலமாகவே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
குமாரவேலின் சினிமா பயணம் 2001-ம் ஆண்டில் ‘மாயன்’ படத்திலிருந்து தொடங்கியது. அதையடுத்து தங்கர்பச்சனின் ‘அழகி’ படத்தில் வாய்ப்பு. இந்த இரு படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராதா மோகன் இயக்கிய ‘அழகிய தீயே’ படத்தில் நடிக்க வாய்ப்புத் தேடிவந்தது. ராதாமோகனுடன் நட்பு ஏற்படவும் நாடகம்தான் காரணம்.
ஒரு முறை‘மின்னல் ரவி’ என்ற நாடகத்தை அரங்கேற்றினார் குமாரவேல். அந்த நாடகத்தைப் பார்க்க வந்த கேமரா மேன் விசு, இயக்குனர் ராதாமோகனிடம் குமாரவேலை அறிமுகப்படுத்தினார். அந்த அறிமுகமே ராதாமோகன் படத்தில் நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது.
அதையடுத்து ராதாமோகன் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘கெளரவம்’, ‘உப்புக் கருவாடு’, ‘60 வயது மாநிறம்’, ‘காற்றின் மொழி’ என ராதாமோகனின் பெரும்பாலான படங்களில் குமாரவேலும் இடம் பிடித்திருக்கிறார்.
ராதாமோகனின் ஆஸ்தான் நடிகரானது எப்படி எனக் குமாரவேலிடம் கேட்டால், “அது எப்படி நடந்துச்சுன்னு எனக்கே தெரியல” என்று சிரிக்கிறார். “அவருக்கு என்னைப் பிடித்தது ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத்தான் ராதாமோகன் எனக்குக் கொடுத்திருக்கிறார். சில கதாபாத்திரங்களைச் செய்ய முடியுமா என்று தயங்கியபோதுகூட ‘உன்னால் முடியும்’ என்று தட்டிக் கொடுத்து செய்ய வைப்பார். ‘அழகிய தீயே’ படத்துக்கு பிறகு அவருடைய எல்லாப் படங்களிலும் நான் நடிக்கவில்லை என்றாலும், கதை விவாதங்களில் எனக்கும் இடம் கொடுத்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதலும் நட்பும் உண்டு” என்கிறார் குமாரவேல்.
தொடர்ச்சியாக ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில் நடித்துவந்த குமாரவேல், ‘குரங்கு பொம்மை’ படத்தில் வில்லனாகவும் அரிதாரம் பூசியிருந்தார். அந்தக் கதாபாத்திரலும் அவர் ஜொலித்திருந்தார். அண்மையில் வெளியான ‘சர்வம் தாளமயம்’ படத்தில் ஜி.வி.பிரகாஷின் தந்தையாக ஜான்சன் கதாபாத்திரத்தில் முத்திரைப் பதித்திருந்தார் குமாரவேல். விளிம்பு நிலை மக்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரம் அது.
மிருதங்கம் செய்யும் கூலித் தொழிலாளியாக வாழ்ந்திருந்தார்.
அந்தப் படத்தின் இயக்குநர் ராஜிவ் மேனன் குமாரவேலின் நெருங்கிய நண்பர் என்ற போதிலும், அவரையும் ஆடிசன் வைத்துதான் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சென்னை ஐஸ்அவுஸில் மிருதங்கம் செய்யும் தொழிலாளி ஒருவரிடமிருந்து மிருதங்கம் எப்படி செய்வார்கள் என்பதைக் கற்ற பிறகே அந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். “ஒரு கட்டத்தில் அந்தத் தொழிலாளியே எனக்கு இயக்குநர் போல ஆகிவிட்டார்.” என்கிறார் குமாரவேல்.
இதுவரை நாடகங்கள் பலவற்றை எழுதியிருக்கும் குமாரவேல். ‘கற்றது களவு’ என்ற படத்துக்கு திரைக்கதையும் எழுதியிருக்கிறார். நாடகம், சினிமா மட்டுமல்ல, விளம்பரத் துறையிலும் கால்பதித்தவர். 1999-ம் ஆண்டு முதலே விளம்பரத் துறையில் இருந்துவருகிறார். தொடர்ந்து கலையும் கலை சார்ந்த தளமும்தான் குமாரவேலின் ஒரே தேர்வாக இருந்திருக்கிறது. தான் கற்றுக்கொண்ட தொழிலில் இயங்குவதிலேயே அவருக்கு விருப்பம். அது நாடகமாக இருந்தாலும் சரி; விளம்பரம், சினிமாவாக இருந்தாலும் சரி!
---
பிரகாஷ்ராஜ் படங்களிலும் நீங்கள் இடம் பிடித்துவிடுகிறீர்களே?
‘அழகிய தீயே’ படத்திலிருந்து அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அவருடைய படங்களில் திருப்தியான காதாபாத்திரங்கள் கிடைத்தது பெருமையான விஷயம்.
சுமார் 20 ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும், அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?
‘அபியும் நானும்’ படத்துக்கு பிறகு, அதேபோல வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. செய்த கதாபாத்திரத்தையே திரும்பவும் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை.
‘குரங்கு பொம்மை’ படத்தில் திடீர் வில்லன் அவதாரம் எடுத்தன் ஏன்?
நான் நடிகன்பா. நாடகங்களில் எத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருப்பேன். எனக்கு இது புதுசு இல்ல.
விளிம்பு நிலை மக்களின் கதாபாத்திரத்தை ஏற்ற ‘சர்வம் தாளமயம்’ படத்துக்கு ஹோம்வொர்க் ஏதும் செய்தீர்களா?
கண் பார்த்தது.. நடிப்பு தானாக வந்தது. ஆனால், அந்தப் படத்தில் ‘லைவ்’ சூட்டிங்தான் செய்தார்கள். எனவே, அதற்காக ஹோம் ஒர்க் செய்ய வேண்டியிருந்தது.
புதிய படங்கள்?
ஹிப்ஹாப் ஆதியுடன் ‘நட்பே துணை’. சித்தார்த்துடன் ‘அருவம்’ மற்றும் ‘சதுரங்க வேட்டை 2’. இவை இல்லாமல் மிதுலன் படம் ஒன்று.
- இந்து தமிழ், 08/03/2019

No comments:
Post a Comment