அரசியலில் தோற்றுபோன நாஞ்சில் சம்பத் மகனான (லால்குடி கருப்பையா காந்தி - எல்கேஜி) ஆர்.ஜெ. பாலாஜி வார்டு கவுன்சிலராக இருக்கிறார். தன் அப்பாவைப் போல இல்லாமல் பெரிய பதவியைப் பிடிப்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். அந்தத் தருணத்தில் முதல்வருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துபோகிறார். அந்தப் பதவிக்கு ராம்குமார் சிவாஜி வருகிறார்.
இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் ஆர்.ஜெ.பாலாஜி, தேர்தலுக்கு ஆட்களை புரமோட் செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தை அணுகுகிறார். அவர்கள் செய்யும் தகிடுதத்தத்தால் ஆர்.ஜெ.பாலாஜிக்கு இடைத்தேர்தலில் சீட்டு கிடைக்கிறது. ஆனால், ஆர்.ஜெ.பாலாஜிக்குப் போட்டியாக மக்கள் ஆதரவு பெற்ற ஜெ.கே.ரித்தீஸ் களத்தில் குதிக்கிறார். இறுதியில் யார் வெற்றி பெற்றது? ஆர்.ஜெ.பாலாஜியின் லட்சியம் நிறைவேறியதா? இதுதான் எல்.கே.ஜி. படத்தின் கதை.
கடந்த இரண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை கொத்து பரோட்டாவாகப் போட்டு நையாண்டி செய்திருக்கும் படம் இது. தன்னை வளர்த்துக்கொள்ள நினைக்கும் அரசியல்வாதி எப்படியெல்லாம் ஏமாற்றுவார்; என்னென்ன தகிடுதத்தங்கள் செய்வார்கள் என்பதையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் இயக்குநர். ஆனால், அதை முழுமையான ‘ஸ்பூஃப்’பாகக் காட்சிப்படுத்தாமல் நடந்த விஷயங்களையே காமெடியாக்கியிருக்கிறார்கள்.
மருத்துவமனையில் அமைச்சர்கள் தங்குவது, முதல்வர் இறப்பது, நள்ளிரவு பதவியேற்பு, இடைத்தேர்தல், ஆற்றில் தெர்மோகோல் விடுவது, 20 ரூபாய் டோக்கன் என சமகால அரசியல் நிகழ்வுகளைப் படம் முழுவதுமே அச்சு பிசகாமல் தூவியிருக்கிறார் இயக்குநர். ஆனால், இந்தக் காட்சிகள் மிகையில்லாமல் படத்தோடு பொருந்திபோவது ரசிக்க வைக்கின்றன.
தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டுகள் சமூக வலைதளங்களில் செய்யும் ஜித்து வேலைகளையும் தோலுரித்துகாட்டியிருக்கிறார் இயக்குநர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் டிரெண்ட்டிங் விஷயங்களைக் கலாய்த்திருப்பதும் நேர்த்தி. முழுமையான அரசியல் படம் என்ற வரையறைக்குள் இந்தப் படம் வராது. என்றாலும், அரசியல் காமெடி படம் என்ற வகையில், சமகால அரசியலை நுனிபுல்லாக அணுகுபவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். மீம்ஸ் கிரியேட்டர்கள் நினைத்தால் வள்ளுவனைக்கூட தாலிபன்கள் ஆக்கி விடுவார்கள்; யார் பணம் கொடுத்தாலும் கார்ப்பரேட்டுகள் வேலை செய்வார்கள் போன்ற வசனங்கள் ஈர்க்கின்றன.
வெறுமனவே அரசியலை கலாய்க்கும் படமாக மட்டும் இல்லாமல் மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக கிளைமாக்ஸில் அறிவுரைகளை அள்ளிவிடுகிறார் நாயகன். படம் முழுவதுமே அரசியல் ஜித்து வேலைகளைக் காட்டிவிட்டு, கிளைமாக்ஸில் அறிவுரை சொல்வது அலுப்பூட்டிவிடுகிறது. காமெடிக்காகத் திணிக்கப்பட்ட அபத்தமான பத்திரிகை சந்திப்பு காட்சி, நோய் எதிர்ப்பு போராட்டம் போன்ற காட்சிகள் படத்துக்கு வேகத்தடையை ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு கவுன்சிலரை புரமோட் செய்யும் அளவுக்கு தேர்தல் வேலை செய்பவர்களாக கார்ப்பரேட்டுகளைக் காட்டியிருப்பது மிகையான கற்பனை.
தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் ஒரே ஊர்க்காரரான ஜெ.கே. ரித்திஷைப் பற்றி எதுவுமே தெரியாத உள்ளூர் அரசியல்வாதியாக ஆர்.ஜெ.பாலாஜி
இருப்பது நெருடல். சாதாரண வார்டு கவுன்சிலரை கூட சமூக வலைத்தளம் மூலம் முதல்வராக்கிவிடலாம்; மக்கள் ஆதரவு பெற்ற ஒருவரை சமூகவலைதள உதவியுடன் வீழ்த்திவிடலாம் என்று காட்டுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்.ஜே. பாலாஜி முழு எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அழகாகப் பொருந்துகிறார். ஏமாற்று அரசியல்வாதிக்கான அவரது உடல்மொழியும் கச்சிதம். படத்தில் பல இடங்களில் அவர் கத்துவது காது ஜவ்வை கிழித்துவிடுகிறது. நாயகியாக வரும் பிரியா ஆனந்த் தேர்தல் வேலை செய்யும் கார்ப்பரேட்டாக வருகிறார். அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார்.
ஆர்.ஜெ. பாலாஜியின் அப்பாவாக அறிமுகமாகியிருக்கும் நாஞ்சில் சம்பத் நடிக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், படத்தில் திருக்குறள் சொல்லி சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார். முதல்வராக வரும் ராம்குமார் சிவாஜி, போட்டி அரசியல்வாதியாக வரும் ஜெ.கே. ரித்திஷ், உதவியாளராக வரும் மயில்சாமி ஆகியோர் கதாபாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை லியேன் ஜேம்ஸ். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.. என்ற ரீமிக்ஸ் பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. சென்னையை அழகாகப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது அய்யணா. அந்தோணியின் படத்தொகுப்பும் படத்துக்கு பக்கபலம். சமகால அரசியலை நையாண்டியாகச் சொன்னதைத் தாண்டி, கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால், அரசியல் ஆடுபுலி ஆட்டமாக ‘எல்.கே.ஜி.’ கவர்ந்திருக்கும்.
மதிப்பெண் 2.5 / 5

No comments:
Post a Comment