ஒரு நிஜக் கலைஞன்
"நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை. ஏனெனில், ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது" - நடிகர் விக்ரம் தன்னைப் பற்றியும், தனது திரையுலகப் போராட்டம் பற்றியும் ஒரு விழாவில் பேசிய கருத்துகள் இவை.
உண்மைதான். 1990-ம் ஆண்டு அறிமுகமாகி பல படங்களில் விக்ரம் நடித்திருந்தாலும், 2000-ம் ஆண்டில் வெளியான 'சேது' படமே அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவரைச் சிறந்த நடிகராகவும் அடையாளம் காட்டியது. சினிமாவில் ஓர் இடத்தைப் பிடிக்க ஒரு நடிகருக்கு 10 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல.
ஆரம்ப காலத்தில் தொடர்ந்து தோல்விகளைத் தந்தவர் நடிகர் விக்ரம். ஆனால், அந்தத் தோல்விகளையே படிக்கற்களாக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தவரும் அவர்தான். பாலா இயக்கிய ‘சேது’ ஒரு நல்ல நடிகராக விக்ரமை அடையாளப்படுத்திய விதத்தில் இதுவே அவருக்கு முதல் படம் எனலாம். பாக்ஸ் ஆபீசிலும் பாராட்டப்பட்ட இந்தப் படத்தை திரையிட ஆளில்லாமல் 6 மாதங்கள் இயக்குனர் பாலா தவித்தது தனிக்கதை.
‘சேது’வுக்குப் பிறகு ‘தில்’, ‘காசி’, ‘தூள்’, ‘சாமி’, ‘ஜெமினி’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘தெய்வத்திருமகள்’ ஆகியவை விக்ரம் முத்திரைப் பதித்த படங்கள். சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுக்குப் பிறகு அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் அற்புத கலைஞர் விக்ரம். ‘காசி’ படத்தில் நடிப்பையும் தாண்டி நிஜமாகப் பார்வையில்லாதவர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை கண் முன்னே நிறுத்தியவர் விக்ரம். அந்தளவுக்கு நடிப்பிற்காக மெனக்கெடும் கலைஞன்.
‘தில்’, ‘தூள்’, ‘சாமி’ போன்ற படங்களில் பரபரவென ஓடிய திரைக்கதைக்கு உயிர் கொடுத்தவரும் அவரே. ‘பிதாமக’னின் சித்தன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர் நடித்திருந்தால், பொருந்தியிருப்பாரா எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு படத்தில் வசனம் பேசாமலே தன் திறமையை நிரூபித்துக் காட்டியவர் இந்த சினிமா ‘பிதாமகன்’. இப்படி விக்ரமை பற்றியும் அவரது நடிப்பைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
சமீபகாலமாக விக்ரமின் சில படங்கள் சரிவர போணியாகமல் போயிருந்தாலும், இவரது அடுத்தடுத்தப் படங்களுக்கு எதிர்பார்ப்பு மட்டும் குறையவில்லை. ஏனெனில் நடிகர் விக்ரம் சொன்னது போல, ஹிட் என்பதைவிட திறமைதான் எப்போதும் நிற்கும். விக்ரமின் அந்தத் திறமைதான் அவரை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
சர்ச்சைகளுக்கு அப்பால்...
“யானை கீழே விழுந்தால் உடனே எழுந்திருக்க முடியாது; ஆனால், குதிரை விழுந்தால் உடனே எழுந்து ஓடும், நான் குதிரை மாதிரி’’ என்று சில
ஆண்டுகளுக்கு முன்பு விழா ஒன்றில் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அது அவருக்கு மட்டுமல்ல, நடிகை நயன் தாராவுக்கும் பொருந்தும். காதல் சர்சைகளுக்குப் பிறகு சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டு, மீண்டும் ஃபீல்டில் பிஸியாக நடிக்க முடியும் என்றால், அதுதான் நயன் தாரா.
2003-ம் ஆண்டில் மலையாளப் படத்தில் அறிமுகமான நயன் தாரா தமிழில் ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். குண்டாக இருந்த நயன் தாராவைப் பார்த்து, தமிழில் தாக்குப்பிடிக்க முடியாது என்று ஏளனம் செய்தவர்கள் ஏராளம். ஆனால், அடுத்தப் படத்திலேயே குண்டு உடலை ஸ்லிம்மாக்கி, ‘சந்திரமுகி’யில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து அப்போதைய முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்தளவுக்கு தன்னம்பிக்கை நடிகை நயன் தாரா.
‘ஏகன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘வில்லு’ என சீரான வேகத்தில் முன்னேறிய நயன் தாராவுக்கு ஸ்பீடு ப்ரேக்கர்களாக அமைந்தன அவரது காதல் சர்ச்சைகள். சிம்புடன் காதல் முறிவு, பிரபுதேவாவுடன் காதல், காதலுக்காக மத மாற்றம், மீண்டும் காதல் முறிவு என நயன் தாராவின் பர்சனல் பக்கங்கள் முழுவதும் சர்ச்சை மயம்தான். இந்தச் சர்ச்சைக்கு மத்தியிலும் பழைய சம்பவங்களை நினைத்து கலங்காமல் அடுத்த இன்னிங்ஸிற்காகக் களத்தில் இறங்கி கில்லி ஆடி வருகிறார் என்றால், அதுதான் நயன் தாராவின் ஸ்பெஷாலிட்டி.
யார் அன்புக் காட்டினாலும் இளகிய மனதுடன் அதை நம்புவது நயன் தாராவின் பலவீனம் என்று பொதுவாக அவரைப் பற்றி சினிமா வட்டாரத்தில் கூறுவார்கள். ஆனால், அதற்காக அந்தப் பண்பை நயன் தாரா இதுவரை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஓர் இடைவெளி விட்டு மீண்டும் நடிக்க வந்துள்ள நயன் தாரா கைவசம் 5 படங்கள் இருக்கிறது என்றால், மேலே சொன்னது போல அவர் குதிரை மாதிரி.
இலக்கண இயக்குநர்
மதுரை மாவட்டம் எத்தனையோ சினிமா இயக்குநர்களை தமிழ்
திரையுலகிற்கு வழங்கியுள்ளது. அவர்களில் இயக்குநர் அமீர் சுல்தான் என்ற அமீரும் ஒருவர். முதல் படத்தில் மட்டுமல்ல; தன் ஒவ்வொரு படத்திலும் முந்தைய படத்தைவிட தன்னை இன்னும் அழுத்தமாக நிரூபிப்பதுதான் ஒரு இயக்குநருக்கான மிகச் சிறந்த இலக்கணமாக இருக்க முடியும். அந்த இலக்கணத்துக்குரியவர் அமீர்.
‘சேது’ படத்தில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா பாடம் கற்றவர் அமீர். பாலாவின் சிஷ்யன் என்ற தகுதியுடன் 2002-ம் ஆண்டில் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் இவர். காதல் என்றாலே வெறுக்கும் இளைஞன், கடைசியில் காதலில் விழுவதுதான் கதை. இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும், பலரது பாரட்டுக்களைப் பெற தவறவில்லை.
இயக்குனர் பாலாவின் சிஷ்யன் என்பதாலோ என்னவோ அவரது அடுத்தப் படமான ‘ராம்’ படத்தில் அவரது பாதிப்புகளும் முத்திரையும் படத்தில் தெரிந்தது. 2005-ம் ஆண்டில் வெளியான ‘ராம்’ படம் அமீருக்கு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. ஒரு மன நோயாளியாக ஜீவாவை நடிக்க வைத்து மிகச் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கும் அவனை வாஞ்சையோடு வளர்க்கும் தாயிக்குமானப் பாசத்தை காட்சிக்குக் காட்சி செதுக்கியிருந்தார் அமீர். பாசத்தையும் சஸ்பென்ஸையும் கலந்து கொடுத்ததில் ‘ராம்’ படத்துக்கு ரசிகர்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பரிசாகத் தந்தனர். சைபிரஸ் திரைப்பட விழாவிலும் ‘ராம்’ படம் விருதை தட்டிச் சென்றது.
அமீரை முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அங்கீகரித்த படம் ‘பருத்தி வீரன்’. 2007-ம் ஆண்டில் வெளியான இப்படம் மூலம் கார்த்தி என்ற பட்டைத் தீட்டப்பட்ட நடிகரை தமிழ் திரையுலகிற்கு வழங்கினார் அமீர். சாதிய சாயலை இலைமறை காயாகக் கூறி கதாநாயகனின் காதல், நய்யாண்டி, சண்டியர்தனத்தை படத்தில் அழகாக சொல்லியிருந்தார் அமீர். படத்தின் முடிவு விமர்சனத்துக்கு ஆளானாலும், தமிழக ரசிகர்கள் இப்படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது, பெர்லின் சர்வதேச திரைப்பட விருது உள்பட பல விருதுகளை இப்படம் வென்றது.
அமீர் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவியை வைத்து வெளியான ‘ஆதிபகவன்’ படம், தனது பாணியிலிருந்து மாறுபட்டு கமர்ஷியல் ஃபார்முலாவுக்குட்பட்டு இயக்கினார் அமீர். அவருக்கே உரித்தான ஒரிஜினாலிடி இந்தப் படத்தில் மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். கதை சொன்ன பாணியிலும் தொய்வு ஏற்பட்டதால் படம் வெ
ற்றி பெறாமல் போனது. கடந்த 16 ஆண்டுகளில் வெறும் 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அமீர். ஆனால், முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.
- ‘தி இந்து’ தீபாவளி மலர், 2013

No comments:
Post a Comment