தமிழ்நாட்டுக்குள் ஒரு நாடு (சிவகங்கை)
தமிழ்நாட்டுக்குள் புகழும் பெருமையும் கொண்ட ஒரு நாடு இருப்பது தெரியுமா? ஆமாம், தமிழகத்தின் பாரம்பரியக் கட்டிடக் கலையை உலகுக்கு பறைசாற்றும் நாடு. சர்வதேச கட்டிடக் கலைக்கு முன்னோடியாக திகழும் நாடு அது. இன்னும் கணிக்க முடியவில்லையா? அதுதான் செட்டிநாடு!
தமிழகத்தின் தெற்கே உள்ள சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காரைக்குடியை மையமாகக் கொண்ட குறிப்பிட்ட சில ஊர்களே ‘செட்டிநாடு’ என்றழைக்கப்படுகிறது. குறிப்பாகக் காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் இப்படி குறிக்கப்படுகிறது. இவற்றை பொதுவாகச் செட்டிநாடு என்றுகூட அழைக்கிறார்கள்.
இந்த செட்டிநாடு கிராமத்தில் காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி என பல ஊர்கள் அடங்கியுள்ளன. நகரத்தார் சமூகத்தினர் வசிக்கும் இந்தப் பகுதியை, ‘நாட்டுக்கோட்டை’ என்றும் அழைப்பது உண்டு.
செட்டி நாடு சமையல் எந்தளவுக்கு புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு புகழ் பெற்றது செட்டி நாடு வீடுகள். குறிப்பாக ஆயிரம் ஜன்னல் வீடு உள்ள செட்டிநாடு வீடுகள் மிகவும் பிரபலம். செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டுவரை கட்டப்பட்டவை. எல்லா வீடுகளுமே 80 அடி முதல் 120 அடிவரை அகலம், 160 அடி முதல் 240 அடிவரை நீளம் கொண்டவை. பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் வீடுகள் இழைத்துக் கட்டப்பெற்றவை. ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள்வரையிலும் பிடித்திருக்கிறது.
கலையம்சம் உள்ள செட்டி நாடு வீடுகள் போலவே அதன் வீதிகளும் மிகவும் வித்தியாசமனவை. குறிப்பிட்ட சமுதாயத்தின் பெருமை பேசினாலும், தமிழ்நாட்டின் பெருமை என்று செட்டிநாட்டை உறுதியாகக் கூறலாம்.
இது ஊட்டி மாதிரி (தேனி)
மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயர். மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி பச்சை பசேல் எனப் பரந்து விரிந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு இந்த மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து 30 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்த ஊர். அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் வெகு பிரசித்தம்.
குன்னூர், ஊட்டியில் இருப்பதுபோல மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய உள்ளன. ஆனால், வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை சராசரியாக 12 டிகிரி செல்சியஸ். அதனால், எப்போதும் இதமான குளிர் இருக்கும். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில்கூட ‘ஸ்வெட்டர்’ தேவைப்படும்.
வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள் என ரம்மியமாகக் காட்சியளிக்கிறது மேகமலை. எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது இங்கு தனிச்சிறப்பு. இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. திடீர் திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு, காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்) என விலங்குகளின் நடமாட்டத்தை அதிகம் காணலாம்.
சின்னமனூரிலிருந்து நேராக மேகமலைக்கு செல்ல பேருந்து வசதி உண்டு. காரில் செல்வதாக இருந்தால், ஆண்டிப்பட்டியிலிருந்து கண்டமநாயக்கனூர் சென்று அங்கிருந்து மேகமலைக்கு செல்லலாம்.
நாகரீகத் தொட்டி (நெல்லை)
திருநெல்வேலி செல்லும் பாதையில் இருக்கும் ஆதிச்சநல்லூர் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? பொட்டல் காடாக காணப்படும் ஆதிச்சநல்லூர்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்த, நம்முடைய கலாச்சாரம் செழித்தப் பகுதி என்றால் நம்புவீர்களா?
1876-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த ஜகோர் எனும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மானுடவியல் ஆராய்ச்சிக்காக, இந்தியாவுக்கு வந்தார். ஆதிச்சநல்லூரில் உடைந்த மண்பாண்டத் துண்டுகளைக் கண்டு தோண்டிப் பார்த்தபோது முதுமக்கள் தாழி, செம்புப் பட்டை, இரும்பு ஆயுதங்களைக் கண்டெடுத்தார்.
1900-ம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாராய்ச்சி செய்தபோது வாணலி, தயிர்ப் பானை, முக்கனிசட்டி, முக்காலிக் குதில், ஜாடி, உருளி, மையக் கிண்ணம் என சுமார் 100 வகையான சமையல் பாத்திரங்களும் ஈட்டி, எறிவேல், கைக் கோடாரி, பலிவாள், அம்புதலை, வேலாயுதம், அகன்றவாய்ப் பரசு, கத்தி, குத்துவாள் போன்ற ஆயுதங்களும் தோண்டத் தோண்ட கிடைத்தன. இவையெல்லாம் வெளிநாட்டு அருங்காட்சியங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கையால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ம் ஆண்டில் சுமார் ஆறு மாதங்கள் இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சி துறை இங்கு ஆய்வு நடத்தியது. அடுக்கு மண்பாண்டங்கள், 168 முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள், விளக்குகள் கிடைத்தன. மேலும் பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று ஆதிச்சநல்லூரும் மிகத் தொன்மையானதாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
ஆதிச்சநல்லூர் 3,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மொத்தம் உள்ள 114 ஏக்கரில் சுமார் 10 சென்ட் அளவுக்கு மட்டுமே குழிதோண்டி பழங்கால பொருட்களைச் சேகரித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களைத் தட்டினால் வெண்கல ஒலி கேட்கிறது, கீழே போட்டால் உடைவது இல்லை. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிக்குள் மனித எலும்புகள் கிடைத்துள்ளன. எனவே இவர்கள் திராவிடர்களாகவும் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வங்கதேசத்து தொல்லியல் நிபுணர் பானர்ஜி, ஆதிச்சநல்லூரை 'நாகரிகத்தின் தொட்டில்’ என்கிறார்.
அதிசய தொட்டிப் பாலம் (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியது. நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 1962-ல் தொடங்கப்பட்டு 1969-ல் கட்டி முடிக்கப்பட்டது. மாத்தூர் என்ற கிராமத்தில் கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரு மலைகளுக்கு நடுவில் இப்பாலம் கட்டப்பட்டது.
தொட்டிப் பாலம் நீளவாக்கில் 1,204 அடியும் தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 28 தூண்கள் இப்பாலத்தைத் தாங்கி நிற்கின்றன. பெரிய பெரியத் தொட்டிகளாகத் தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் ‘தொட்டிப் பாலம்’ எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் ‘தொட்டில் பாலம்’ எனவும் இதை அழைக்கிறார்கள். இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று பார்த்தால், ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.
ஆசிய அளவில் புகழ்பெற்ற இப்பாலம் திருவட்டாற்றிலிருந்து 3 கி.மீ. தொலையிலும், கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் அமைந்துள்ளது.
தங்கமான நல்லதங்காள் (விருதுநகர்)

‘நல்லதங்காள்’ படம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நல்லதங்காள் கதை பற்றி உங்களுக்கு தெரியுமா? நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதை. விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கதை மிகப் பிரபலம்.
நல்லதங்காள் தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் என நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான் என்பதே நல்லதங்காள் கதை.
நல்லதம்பி-நல்லதங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. தற்போது நல்லதங்காளை தெய்வமாக விருதுநகர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வணங்குகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில்தான் நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால் நல்லதங்காளுக்கு இப்பகுதியில் கோயிலும் எழுப்பப்பட்டுள்ளது.
கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து காணப்படுகிறது. நல்லதங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள். ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழா பிரசித்தம்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வாத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து அர்ச்சுனாபுரம் சென்றால், அங்கு நல்லதங்கள் கோயிலை தரிசிக்கலாம்.
கல்லிலே ஒரு கலைவண்ணம் (தூத்துக்குடி)
ஒரே கல்லில் கோயில் உருவாக்கிய தமிழர்களின் தனித்திறமையைக் கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால், நீங்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வெட்டுவான்கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குதான் தமிழர்களின் பழம்பெருமை பேசும் கழுகுமலை பாண்டிய குடவரை கோயில் உள்ளது
கழுகு மலையின் அடிவாரத்தில் அப்படியே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது இந்தக் கோயில். ஒரு மலையைக் குடைந்து ஒரு கலைப் பெட்டகத்தையே நிறுவியிருக்கிறார்கள் சமண முனிவர்கள். பண்டையக் காலத்தில் சமணர்கள், மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் இடமாக இருந்தது இந்தக் கழுகு மலை. அப்போது பல சமண முனிவர்கள் சேர்ந்து அற்புதமான சிற்பங்கள் மற்றும் கோயிலை கழுகு மலையில் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.
இது மற்ற குடவரை கோயில்போல கிடையாது. யாரும் எளிதில் செதுக்க முடியாத கடினமான பாறையில் ஆனது இந்த கழுகு மலை. அப்படி இருந்தும் அவ்வளவு துல்லியமாகவும் கலை உணர்வுடனும் சமண முனிவர்கள் இந்தச் சிலைகளைச் செதுக்கியிருக்கிறார்கள். வரகுணப் பாண்டியன் காலத்தில், சிவனுக்காகக் கழுகு மலையின் பாறையில் 7.50 மீ. ஆழத்துக்கு சதுரமாக வெட்டியெடுத்து, அதன் நடுப்பகுதியை ‘வெட்டுவான் கோயிலாக' செதுக்கியுள்ளனர்.
பண்டையத் தமிழர்களின் சிற்பக் கலைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
- தி இந்து தீபாவளி மலர், 2013

No comments:
Post a Comment