சென்னையின் பெரிய தாதா சம்பத். இவரது தங்கை பாப்ரி கோஷை காதலிக்கிறார் சந்தானத்தின் நண்பர் சேது. யாருக்கும் தெரியாமல் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கிறார் சந்தானம். இதனால் சந்தானத்தை கொல்ல சம்பத் துடிக்கிறார். சந்தானமோ சென்னையில் இருந்தால் பிரச்சினை என, பெங்களூரு சென்றுவிடுகிறார். சென்ற இடத்தில் வைபவியைக் கண்டதும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் வைபவி சம்பத்தின் இரண்டாவது தங்கை என சந்தானத்துக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு சம்பத்தை, சந்தானம் எப்படி வழிக்குக் கொண்டுவந்து, காதலில் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
அரதப்பழசான ஒரு கதையைப் பட்டி, டிங்கர் பார்த்து கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சேதுராமன். முதல் பாதியில் தங்கையைத் திருமணம் செய்துகொண்டு போன சேதுவை விட்டுவிட்டு உதவிய சந்தானத்தை தேடித் தேடி அழைகிறார் சம்பத். இரண்டாம் பாதி அது அப்படியே உல்டாவாக மாறுகிறது. யாரைத் தேடி சம்பத் அழைகிறாரோ, அவரது வீட்டிலேயே குடும்ப சகிதம் இருந்துகொண்டு, சந்தானம் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு தலையாட்டுகிறார். இந்த இரண்டு முரண்பாடுகளுக்கு மத்தியில்தான் மொத்தத் திரைக்கதையும் செல்கிறது. அதனால், லாஜிக்கைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ‘டைமிங் ஜோக்’ கணக்காக கதை நகர்கிறது.
அதற்கேற்ப முரட்டு பார்வையுடனும் தடித்த உருவத்துடன் வரும் தாதா சம்பத் முதல் அடியாட்கள்வரை பாத்திர வார்ப்புகள் பக்குவம் இல்லாமல் பகடியாகவே காட்டப்படுகின்றன. சற்று துரத்தல் அம்சம் உள்ள இந்தக் கதையில் தேடும் படலம் அம்சங்களையாவது விறுவிறுப்பாகக் காட்டியிருக்கலாம். அதுவும் இல்லை. படத்தில் வரும் திடீர் ட்விஸ்டுகளும் சுவாரசியத்தைக் கூட்ட உதவ மறுக்கின்றன. இதனால், காட்சிகள் மனதில் ஒட்டாமல் தறிகெட்டு பயணிக்கின்றன. அடிக்கடி வரும் பாடல்களும் படத்துக்கு வேகத்தடையாக அமைந்துவிடுகின்றன.
கடைசிவரை விவேக் எது சொன்னாலும் நம்பாத சம்பத், கிளைமாக்ஸில் மட்டும் உடனே நம்புவது அபத்தம். விதவிதமாக வரும் சந்தானம், உண்மையில் என்னதான் செய்கிறார் என்பதைக்கூட சொல்லாமல் விட்டதெல்லம் இயக்குநருக்கே வெளிச்சம். சம்பத் முதல் அவரது ரவுடிக்கூட்டம்வரை ஆறாம் அறிவு இல்லாதவர்கள்போலவே காட்டுவது, வகைத்தொகை இல்லாமல் சந்தானத்துக்கு பலரும் உதவுவதெல்லாம் அக்மார்க் சினிமாத்தனம்.
திரைக்கதையில் இப்படி பலவீனங்கள் இருந்தாலும், ஒட்டுமொத்த படத்தின் பலமும் சந்தானம்தான். நடன அசைவுகளிலும் ஸ்டைலான தோற்றத்திலும் சீறி பாய்ந்து சண்டைப் போடுவதிலும் முழுமையான நாயகனாகப் பரிணமித்திருக்கிறார். காதலியைக் கலாய்ப்பது, தினுசு தினுசாக யோசிப்பது, விவேக், சம்பத்தைப் பேசிபேசி கவிழ்ப்பது என அவரது பாத்திரம் கச்சிதம். ஆனால், அவரது உடல்மொழி ஒத்துழைக்க மறுப்பது மைனஸ். ‘பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்கிறது பழைய ஸ்டைல், பஞ்ச் டயலாக் பேசுறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைலு’, ‘போனவாரம்கூட ஓட ஓட ஒருத்தனை வெட்டுனேன், ஓடும்போது முடி வெட்றது ரொம்ப கஷ்டமாச்சே எப்படி வெட்டுன' போன்ற அவரது வழக்கமான நையாண்டி வசனங்களுக்கும் வசீகரிக்கின்றன.
நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் விவேக்கும் தாதா சம்பத்தோடு சேர்ந்து சுற்றுகிறார். பார்த்துபார்த்து புளித்துப்போன அவரது பாத்திரத்தில் எந்தப் புதுமையும் இல்லை. சில இடங்களில் மட்டுமே விவேக்கின் நகைச்சுவை எடுபடுகிறது. நாயகி வைபவி படம் முழுக்க வந்தாலும், அவருக்குப் பெரிய வேலையில்லை. பயமுறுத்தும் தாதாபோல முதலில் காட்டப்படும் சம்பத், கடைசியில் சிரிப்பு ரவுடி கணக்காக மாறிவிடுகிறார். திடீர் வில்லனாக வரும் சரத் லோகிதாஸின் பாத்திரவார்ப்பும் ஏனோதானோ ரகம்தான். சிரிக்க வைக்க டிடிவி கணேஷ், ரோபோ சங்கர், சுவாமிநாதன் என காமெடியர்கள் இருந்தாலும், பவர்ஸ்டார் சீனிவாசனும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்ட வருகிறார்.
படத்துக்கு இசை சிம்பு. பின்னணி இசையில் அவருக்கு பெரிய வேலையில்லை. ‘தேவதை...’, ‘கலக்கு மச்சான்..’ பாடல்கள் தாளம்போட வைக்கின்றன. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவில் குறையில்லை.
சக்க போடு போடு ராஜா - புதுமை இல்லாத சாதாரண ராஜா!
மதிப்பெண்: 2 / 5

No comments:
Post a Comment