ஜெர்மனியில் 12 ஆண்டுகள் நீடித்த இவரது சர்வாதிகார ஆட்சியில் ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்து பல நாடுகளை சுனாமியாகக சுருட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். தன்னை வெல்ல உலகில் யாரும் இல்லை என்ற இறுமாப்பில் போலந்து மீது படையெடுத்து இரண்டாம் உலகப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். 20-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகையே நடுங்க வைத்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி, 1946 ஏப்ரல் 30 அன்று முடிவுக்கு வந்தது. ஹிட்லர் இறந்து இந்த வாரத்தோடு 64 (2020-ம் ஆண்டோடு ஹிட்லர் இறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன) ஆண்டுகள் உருண்டோடுவிட்டன.
ஜெர்மனி - ஆஸ்திரிய எல்லையான பிரானோவில் 1889 ஏப்ரல் 20 அன்று பிறந்தார் அடால்ப் ஹிட்லர். அவரது தந்தை அலாய்ஸ் ஹிட்லர். தாய் கிளாரா. குட்டிப்பையன் ஹிட்லர் ரொம்பவே சாது. ஓவியன் ஆவதே அவனுடைய கனவு. 1903-ம் ஆண்டில் தந்தையையும், அடுத்த 4 ஆண்டுகளில் தாயையும் பறிகொடுத்த ஹிட்லரின் வாழ்க்கை திசை மாறியது. பிழைப்புக்காக ஆஸ்திரியா தலைநகர் வியன்னா சென்றார். தினக்கூலி சாயப்பட்டறை வேலை. வாழ்த்து அட்டைகளுக்கு ஓவியம் வரைவது ஆகியவைதான் ஹிட்லரின் ஆரம்ப கால வேலைகள்.

ஏழைகளாகவும் கூலிகளாகவும் இருந்தனர். சொகுசு வாழ்க்கை வாழ்ந்த யூதர்களுக்கே எதிலும் முன்னுரிமை. இது ஹிட்லருக்குப் பிடிக்கவில்லை. ஐரோப்பாவில் பாராளுமன்ற நடைமுறையும் ஹிட்லருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்துக்கும் மேல்மட்ட அளவில் பரவியுள்ள யூதர்களே காரணம் என்று எண்ணினார் ஹிட்லர்.
1914-ல் முதல் உலகப் போரின்போது வியன்னாவில் இருந்து வெளியேறி ஜெர்மனி சென்ற ஹிட்லர், ராணுவத்தில் இணைந்தார். போரில் ஜெர்மனி அடிவாங்கியது. ஆனால், அகண்ட ஜெர்மனி கனவு ஹிட்லருக்குள் புகைந்துகொண்டே இருந்தது. அப்போது ஜெர்மன் தொழிலாளர் கட்சி யூத எதிர்ப்பைக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கட்சியில் மக்களைக் கவரக்கூடிய அளவில் பேச்சாளர்கள் இல்லை. இந்தக் கட்சியில் சேர்ந்த ஹிட்லர், குறுகிய காலத்திலேயே பேச்சுத்திறமையால் கட்சியின் தலைமைப் பொறுப்பையும் பெற்றார். கட்சியின் பெயரை தேசிய சோஷலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி என மாற்றினார். சுருக்கமாக ‘நாஜி’.
1928-ல் நடந்த தேர்தலில் நாஜிகள் தோல்வியைத் தழுவினர். 1933-ல் அரசுக்கு எதிராக மக்களை புரட்சி செய்ய நாஜிகள் தூண்டினர். இதில் ஹிட்லர் வெற்றியும் பெற்றார். ஜனாதிபதியாக இருந்த ஹிண்டன்பக் புரட்சிக்கு தலைவணங்கி ஹிட்லரை பிரதமராக அறிவித்தார். அடுத்த சில மாதங்களிலேயே ஹிண்டன்பக் இறந்துபோக, ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டார் ஹிட்லர். ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்து தன்னை ஜெர்மனியின் சர்வாதிகாரியாக அறிவித்தார் ஹிட்லர்.

1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இந்தப் போரில் ஐரோப்பா முழுவதும் யூதர் ஒழிப்பு என்ற சிந்தனை அவரிடம் எழுந்தது. போர் மூலம் ஆஸ்திரியா, செக்கோஸ்லோவேகியா ஆகிய நாடுகளை ஜெர்மனியுடன் இணைத்தார். அந்நாடுகளிலும் யூதர்களைக் கொன்றுகுவித்தனர் நாஜி படையினர். பிடிபட்ட யூதர்களை விஷவாயு செலுத்தி கொலை செய்தனர். பல யூதர்கள் மருத்துவப் பரிசோதனை விலங்குகளாக ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போருக்கு முன்புவரை ஹிட்லருக்கு எல்லாமே சாதகமாக இருந்தது. முடிந்தவரை யூதர்கள் அனைவரையும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று இனவெறியும் ரத்த வேட்கையும் ஹிட்லரை ஆட்டிப்படைத்தது. இக்காலகட்டத்தில் மட்டும் 57 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குக் காரணமான இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளை பழிவாங்க நினைத்தார். முன் அறிவிப்பு இல்லாமல் போலந்து மீதும் போர் தொடுத்தார். அப்போதுதான் நேச நாடுகள் என்ற பெயரில் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து ஜெர்மனிக்கு எதிராகக் களம் இறங்கின. இன்னொருபுறம் ரஷ்யாவும் ஜெர்மனி மீது போர் தொடுத்தது. இது இரண்டாம் உலகப் போராக உருவெடுத்தது.

இருப்பேன்’ என்று உறுதியாக இருந்தார்.
1945 ஏப்ரல் 20, ஹிட்லருக்கு 56-வது பிறந்த தினம். தொடர்ந்து வந்த தோல்விகளால் உற்சாகமே இல்லாத கொண்டாட்டம். ஏற்கனவே இருவரை திருமணம் செய்திருந்த ஹிட்லர், ஏப்ரல் 28 அன்று 3-வது காதலி ஈவா பிரானை திடீர் மனம் புரிந்துகொண்டார். ஏப்ரல் 30 அன்று ரஷ்யப் படைகள் பெர்லினில் புகுந்தன. அனைவரிடம் இருந்தும் விடைபெறுவதாகக் கூறி ஓர் அறைக்குச் சென்றார் ஹிட்லர். ஈவாவுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஹிட்லரின் சர்வாதிகாரம் மட்டுமல்ல, அடுத்த ஒரு வாரத்தில் இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. ஹிட்லரின் வாழ்க்கை ரத்த சகதியால் ஆனது. அவருக்கு மனநோய் ஏற்பட்டதால்தான் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆண்டுகள் பல ஆனாலும், அவர் ஆடிய பேயாட்டத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. சர்வாதிகாரம் என்ற குரூரத்துக்கு புதிய இலக்கணம் படைத்தவர் ஹிட்லர்!
- முத்தாரம், 30-04-2009
No comments:
Post a Comment