உலகக் கோப்பை கிரிக்கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்ற தொடர் என்றால், 1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் அது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடர் ரசிகர்களுக்கு புதிய விருந்து படைத்தது என்றுகூடச் சொல்லலாம். வெள்ளை உடையில் ஒரு நாள் போட்டிகளை விளையாடிய வீரர்கள் கலர்ஃபுல் உடைகளுக்கு மாறினார்கள். அழகான மைதானங்கள், வெள்ளைப் பந்து, பகல்-இரவு ஆட்டங்கள், கறுப்பு ஸ்கிரீன்கள், ரீப்ளே ஸ்கிரீன்கள், ஸ்டெம்ப் விஷன், புதிய கிரிக்கெட் விதிமுறை எனப் புதிய பரிணாமம் பெற்றிருந்தது இந்தத் தொடர்.
ஒன்பது அணிகள்
1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 8 அணிகளே பங்கு பெற்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் 9 அணிகள் களம் கண்டன. புதிய அணியாக தென் ஆப்பிரிக்கா அறிமுகமானது. இனவெறி கொள்கைக் காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா 1991-ம் ஆண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. புதிதாக தென் ஆப்பிரிக்கா அணி வந்ததால், 9 அணிகளை இரண்டாக பிரிக்க முடியவில்லை. எனவே எல்லா அணிகளும் ஒவ்வொரு அணியுடனும் மோதுவது போல அட்டவணையை மாற்றியமைத்தார்கள். ( 1992-ம் ஆண்டு மட்டுமே இப்படி ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன்பிறகு இப்போது வரை அணிகள் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன).
சச்சின் அறிமுகம்
இந்திய அணியைப் பொறுத்தவரை அனுபவமும் இளமையும் கலந்த அணியாகவே காட்சியளித்தது. இதற்கு முந்தைய 1987-ம் ஆண்டு
உலககோப்பையில் விளையாடிய வீரர்களில் கபில்தேவ், அசாருதீன், ஸ்ரீகாந்த், மனோஜ் பிரபாகர், கிரண் மோரே, ரவிசாஸ்திரி ஆகியோர் மட்டுமே 1992 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உலகக் கோப்பை தொடர்தான் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய முதல் தொடர்.
1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையையும், 1987-ம் ஆண்டு அரையிறுதி வரையும் அணியை வழிநடத்தி அழைத்துச் சென்ற கபில்தேவ் இந்தத் தொடரில் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றார். இந்தத் தொடரில் இடம் பெற்ற ஸ்ரீகாந்த், தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியதால் 1989-ம் ஆண்டு அணியிலிருந்து விலக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் தேவை என அணி நிர்வாகம் கருதியதால் இரண்டு ஆண்டுகள் கழித்து அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அறிமுகங்கள்
சச்சின் டெண்டுல்கர் போலவே விநோத் காம்ளி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இது முதல் உலகக் கோப்பையாக அமைந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூறாவளியாக உருவான இலங்கையின் சனத் ஜெயசூர்யா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.
இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அங்கு டெஸ்ட், முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா? அதுபோலவே 1992-லும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அங்குள்ள சூழ்நிலையை நன்றாக பழகியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், நடந்தது வேறு கதை.
அதிர்ச்சி தொடக்கம்
இந்த உலகக்கோப்பையில் எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைக்கூட யாராலும் கணிக்க முடியவில்லை. அது உண்மை என்பது பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்று கோப்பையைக் கைப்பற்றியபோது எல்லோருக்கும் தெரிந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. உலக சாம்பியன் என்ற அந்தஸ்தோடு உள்ளூரில் தெம்பாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியா செமத்தியாக அடி வாங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில்
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அணித் தலைவர் மார்டின் குரோவ் 100 ரன்கள் விளாசினார். பதிலடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் 100 ரன்கள் விளாசினார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.
புதுமை உத்தி
முதல் முறையாக இந்தத் தொடரில் நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோவ் தொடக்க ஓவரை சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு வீச செய்தார். நியூசிலாந்தின் தீபக் பட்டேல் முதல் ஓவரை வீசி எதிரணிகளை ரன் எடுக்க முடியாமல் கட்டுப்படுத்தினார். இது அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டது.
உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின்
ஒரு வீரர்; இரு அணி
மார்க் கிரேட்பாட்ச் முதலில் அணியிலேயே சேர்க்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடக்க வீரரான ஜான் ரைட்டுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக மார்க் கிரேட்பாட்ச் அணியில் இடம்
பெற்றார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு விதிகளைப் பயன்படுத்தி ருத்ரதாண்டவமாக விளையாடினார். அது அந்த அணிக்குப் பெரும் பலனைக் கொடுத்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இதன்பின்பு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வெசல்ஸ், அந்த அணிக்குத் தலைவராக இருந்தார். இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்.
தி இந்து, 30/01/2015
ஒன்பது அணிகள்
1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 8 அணிகளே பங்கு பெற்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் 9 அணிகள் களம் கண்டன. புதிய அணியாக தென் ஆப்பிரிக்கா அறிமுகமானது. இனவெறி கொள்கைக் காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலக்கப்பட்ட தென் ஆப்பிரிக்கா 1991-ம் ஆண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதற்கு முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. புதிதாக தென் ஆப்பிரிக்கா அணி வந்ததால், 9 அணிகளை இரண்டாக பிரிக்க முடியவில்லை. எனவே எல்லா அணிகளும் ஒவ்வொரு அணியுடனும் மோதுவது போல அட்டவணையை மாற்றியமைத்தார்கள். ( 1992-ம் ஆண்டு மட்டுமே இப்படி ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன்பிறகு இப்போது வரை அணிகள் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன).
சச்சின் அறிமுகம்
இந்திய அணியைப் பொறுத்தவரை அனுபவமும் இளமையும் கலந்த அணியாகவே காட்சியளித்தது. இதற்கு முந்தைய 1987-ம் ஆண்டு

1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையையும், 1987-ம் ஆண்டு அரையிறுதி வரையும் அணியை வழிநடத்தி அழைத்துச் சென்ற கபில்தேவ் இந்தத் தொடரில் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றார். இந்தத் தொடரில் இடம் பெற்ற ஸ்ரீகாந்த், தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியதால் 1989-ம் ஆண்டு அணியிலிருந்து விலக்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் தேவை என அணி நிர்வாகம் கருதியதால் இரண்டு ஆண்டுகள் கழித்து அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
அறிமுகங்கள்
சச்சின் டெண்டுல்கர் போலவே விநோத் காம்ளி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இது முதல் உலகக் கோப்பையாக அமைந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூறாவளியாக உருவான இலங்கையின் சனத் ஜெயசூர்யா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.
இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அங்கு டெஸ்ட், முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது அல்லவா? அதுபோலவே 1992-லும் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அங்குள்ள சூழ்நிலையை நன்றாக பழகியுள்ள இந்தியா கோப்பையை வெல்லும் என்று பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், நடந்தது வேறு கதை.
அதிர்ச்சி தொடக்கம்
இந்த உலகக்கோப்பையில் எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைக்கூட யாராலும் கணிக்க முடியவில்லை. அது உண்மை என்பது பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்று கோப்பையைக் கைப்பற்றியபோது எல்லோருக்கும் தெரிந்தது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது. உலக சாம்பியன் என்ற அந்தஸ்தோடு உள்ளூரில் தெம்பாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியா செமத்தியாக அடி வாங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில்
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அணித் தலைவர் மார்டின் குரோவ் 100 ரன்கள் விளாசினார். பதிலடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் 100 ரன்கள் விளாசினார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.
புதுமை உத்தி

உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின்
ஒரு வீரர்; இரு அணி

பெற்றார். தொடக்க வீரராக களமிறங்கிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு விதிகளைப் பயன்படுத்தி ருத்ரதாண்டவமாக விளையாடினார். அது அந்த அணிக்குப் பெரும் பலனைக் கொடுத்தது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார். இதன்பின்பு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வெசல்ஸ், அந்த அணிக்குத் தலைவராக இருந்தார். இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்.
தி இந்து, 30/01/2015
No comments:
Post a Comment