மனிதர்களின் மறுபிறவி படங்களை மட்டுமே பார்த்து ரசித்த நீங்கள், ஒரு விலங்கின் மறுபிறவி படத்தை பார்க்கத் தயாரா? ‘ஏ டாக் பர்போஸ்’ என்ற ஹாலிவுட் படம் ஒரு நாயின் மறுபிறப்பு கதையைச் சொல்கிறது.
எதான் என்று சிறுவன் ஒரு நாயை கொண்டு வந்து வளர்க்கிறான். அந்த நாயை அவனுடைய பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும் வீட்டின் பின்புறம் அதற்காகக் குடில் அமைத்து அதற்கு பெய்லி என்று பெயரிட்டு அழைக்கிறான். நாயும் சிறுவனும் ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடியாத அளவுக்கு நெருக்கமாகிறார்கள். சிறுவன் கொஞ்சம் பெரியவனானதும் கல்லூரி படிப்புக்காக நாயைப் பிரிந்து செல்கிறான். அந்தப் பிரிவில் நாய் நோய்வாய்ப்பட்டு இறக்கிறது.
பிறகு அந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்டு பெண் நாயாகப் பிறக்கிறது. எல்லி என்ற பெயரில் வளரும் அந்த நாய் போலீஸ் நாயாக இருக்கிறது. அப்புறம் தண்ணீரில் விழுபவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. அங்கேயும் குண்டடிப்பட்டு இறந்துபோகிறது நாய். திரும்பவும் அந்த நாய் மறுபிறப்பு எடுக்கிறது. இப்படி மறுபிறப்பு எடுக்கும் நாய் கடைசியில் என்னாகிறது என்பதுதான் ‘ஏ டாக் பர்போஸ்’ படத்தின் கதை.
நாய்க்கும் மனிதர்களுக்குமான ஆத்மார்த்தமான நெருக்கத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். அமெரிக்காவில் புரூஸ் கேமரூன் எழுதி அதிகளவில் விற்பனையான ‘ஏ டாக் பர்போஸ்’ நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் தயாரித்துள்ளார். படத்தை லாஸ் ஹால்ஸ்ட்ராம் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் நீளம் ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள்.
No comments:
Post a Comment