முதல் உலகக் கோப்பைத் தொடரை 1975-ல் கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் நடத்த முடிவு செய்தது ஐ.சி.சி. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் தொடரில் பங்கேற்பது உறுதியானது.
7-வது அணியாக டெஸ்ட் அங்கீகாரம் பெறாத இலங்கை தேர்வு செய்யப்பட்டது. 1964-ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணியாகவே இருந்தது. நிறவெறிக் கொள்கை அந்நாட்டில் பின்பற்றப்பட்டதால், சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால், அந்த அணியால் முதல் உலகக்கோப்பையில் பங்கேற்க முடியவில்லை. ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு அணி பங்கேற்க வேண்டும் என்பதற்காக கென்யா, தான்சானியா, உகாண்டா, நைஜீரியா ஆகிய நாட்டு வீரர்களைக் கொண்ட கிழக்கு ஆப்பிரிக்கா 8-வது அணியாகத் தேர்வானது.
இத்தொடரை புரூடன்ஷியல் நிறுவனம் ஸ்பான்சர் செய்ததால், அந்தப் பெயரிலேயே கோப்பை அழைக்கப்பட்டது. ஒவ்வோர் அணிக்கும் 60 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது. வண்ண உடைகள் இல்லை. ஆர்ப்பாட்டம், அமர்க்களம் இல்லாமல் 1975 ஜூன் 7-ல் தொடங்கியது முதல் உலகக் கோப்பை போட்டி. மொத்தம் 15 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போட்டியில் 12 லீக் ஆட்டங்கள், இரு அரையிறுதி, ஓர் இறுதி ஆட்டம் என 15 ஆட்டங்கள் நடைபெற்றன.
‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, கிழக்கு ஆப்பிரிக்க அணிகளும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளும் களமிறங்கின. தமிழக வீரர் வெங்கட் ராகவன் தலைமையில் முதல் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கியது இந்தியா.
‘ஏ’ பிரிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும், ‘பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஜூன் 21-ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஆஸ்திரே லியா & வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின.
இந்தத் தொடரில் சிறந்த ஆட்டம் என்றால் அது இறுதிபோட்டிதான். வரலாற்றில் சிறப்பான கேப்டன்கள் வாய்ப்பது அணிகளுக்கு அபூர்வம். இறுதியாட்டத்தில் மல்லுக்கட்டிய இரு அணி கேப்டன்களும் அப்படி அரிதானவர்கள்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிளைவ் லாயிடும், ஆஸ்திரேலிய அணிக்கு இயான் சேப்பலும் கேப்டன்களாக இருந்தார்கள். ஆஸ்திரேலியாவே முதல் உலகக் கோப்பையை வெல்லும் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். சாப்பல் மிக பிரமாதமாக ஆஸ்திரேலியா அணியை வழி நடத்தினார். ஆனாலும், வெஸ்ட்இண்டீஸ் அணி கோப்பையைத் தட்டிச் சென்றது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்த பறிகொடுத்தபோது கிளைவ் லாயிட் களமிறங்கி 102 ரன்களை புயலாக விளாசினார். அந்த ரன்னும், விவியன் ரிச்சர்ட்சின் அருமையான பீல்டிங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை வசப்படுத்த காரணமானது.
இந்தியா என்ன செய்தது?
முதல் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு மொத்தமே 18 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டிருந்தன. உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் ஆட்ட நாயகன் விருதை 85 பந்துகளில் 102 ரன் குவித்த கிளைவ் லாயிட் பெற்றார். அப்போது தொடர் நாயகன் விருது அறிமுகம் செய்யப்படவில்லை. முதல் உலகக்கோப்பையில் இந்தியா கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டுமே தோற்கடித்தது.
ஆமை வேக கவாஸ்கர்
ஆமை வேக கவாஸ்கர்
எந்த அளவுக்கு இறுதி ஆட்டம் மனதில் நிற்குமோ அதே அளவு நம் காவஸ்கரின் ஆமை வேக ஆட்டமும் உலகக் கோப்பைப் போட்டிகள் உள்ள வரை நினைவில் இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் அந்த அணி எடுத்த 330 ரன்களை இந்திய அணி தொடக்கூட முடியாது என்று எல்லாருக்குமே தெரிந்திருந்ததுதான். ஆனாலும், ஓரளவுக்கு கவுரவமாக ஸ்கோரை இந்தியா எடுக்கும் என்று எதிர்ப்பார்த்தார்கள். இந்திய அணியோ 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய காவஸ்கர் டெஸ்ட் ஆட்டம் போல டொக்..டொக்.. என டொக்கடித்து மிகமிக மந்தமாக விளையாடினார். 60 ஓவர் முழுவதும் விளையாடிய அவர், கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால் எடுத்த ரன்கள் வெறும் 36. அவர் எதிர்கொண்ட பந்துகள் எத்தனை தெரியுமா? 160 பந்துகள்! கவாஸ்கரின் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்ட வரலாற்றில் இது ஒரு பெரும் கரும் புள்ளியாக அமைந்தது.
- முத்தாரம், 17/01/2011

No comments:
Post a Comment