சென்னையில் ரவுடி ராஜ்ஜியம் நடத்திவருகிறார்கள் தனுஷும் அவருடைய நண்பர் கிருஷ்ணாவும். போதைப் பொருள் மட்டும் கடத்தக் கூடாது என்று தனுஷுக்கு உயர்ந்த நோக்கம்! தனுஷை எதிர்க்கும் கூட்டம் போதைப் பொருள் கடத்தும் தொழிலை செய்ய துடிக்கிறது. இன்னொருபுறம் தனுஷை எப்படியும் கொல்வது என்ற பழைய பகையுடன் சிறையிலிருந்து தப்பிவருகிறார் டொவினோ தாமஸ். போதை பொருள் கடத்த துடிக்கும் கூட்டத்தோடு சேர்ந்து, அந்தத் தொழிலை செய்ய திட்டம் போடுகிறார் டொவினோ தாமஸ். இதற்கு கிருஷ்ணாவின் தம்பி உதவுகிறார்.
போதை பொருளைக் கடத்த தனுஷை ஒருதலையாகக் காதலிக்கும் ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவியைப் பயன்படுத்தும் டொவினோ தாமஸ், தனுஷையும் கிருஷ்ணாவையும் பிரிக்கவும் காய் நகர்த்துகிறார். அந்த முயற்சியில் நண்பர்கள் தனுஷும் கிருஷ்ணாவும் பிரிகிறார்கள். அந்தத் தருணத்தைப் பயன்படுத்தி தனுஷைத் தீர்த்துக்கட்ட டொவினோ தாமஸ் முயற்சிக்கிறார். கொலை முயற்சியில் சாய் பல்லவி சிக்குகிறார். இதன்பிறகு தலைமறைவாகும் தனுஷ் என்ன ஆனார்? அரசியல்வாதியாக உயரும் டொவினோ தாமஸை தனுஷ் என்ன செய்தார்? பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மாரி 2.
‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் இது. சில கதாபாத்திரங்களையும் தனுஷின் தோற்றத்தையும் தவிர முந்தைய படத்தின் சாயல் துளியும் இல்லாமல் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி மோகன். ரவுடி கோஸ்டி கதைக்கான கரு இருந்தும், திரைக்கதையைப் பற்றி கவலை இல்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குநர். விளைவு, கடிவாளம் இல்லாத குதிரையாக ஓடுகிறது திரைக்கதை. ரவுடித்தன கதைகளுக்கே உரிய விறுவிறுப்பு படத்தில் இல்லை. பழிவாங்கல் கதையில் இருக்கும் சடுகுடு ஆட்டங்களும் இல்லை. இந்தக் குறையைப் போக்க நகைச்சுவைக் காட்சிகளை தூக்கலாக வைத்திருக்கிறார்கள். ஆனால், அதிலும் ஈர்ப்பு இல்லை. இந்தக் கதையை துணிந்து இயக்கிய பாலாஜி மோகனையும் நம்பி நடித்த தனுஷையும் நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
முதல் பாகத்தில் ரவுடியில் நல்ல ரவுடி என்ற பாத்திர வார்ப்பாக வருகிறார் தனுஷ். இரண்டாம் பாகத்தில் மாரியப்பனாக சாதுவாக மாறிவிடுகிறார். கிளைமேக்ஸில் மீண்டும் ரவுடி மாரியாக மாறி வில்லனை வதம் செய்கிறார். ‘பாட்ஷா’ பாதிப்பிலிருந்து எப்போதுதான் தமிழ் சினிமா மீளும் என்றே தெரியவில்லை. டொவினோ தாமஸ் வில்லனாக அவதாரம் எடுக்கச் சொல்லப்படும் காரணங்களில் கொஞ்சமும் வலுவில்லை. தலைமறைவாகிவிடும் தனுஷை, எட்டு ஆண்டுகள் கழித்தும் விட்ட இடத்திலிருந்து இயக்குநர் காட்ட முனைந்திருப்பது அயற்சியை ஏற்படுத்திவிடுகிறது. கொலைகளை சர்வ சாதாரணமாகச் செய்கிறார் தனுஷ். ஆனால், அதைக் கண்டுகொள்ளாத ஐ.ஏ.எஸ். அதிகாரி வரலட்சுமியும் போலீசும், தனுஷை வைத்து டொமினோ தாமஸை கொலை வழக்கி சிக்க வைக்க செய்யும் உத்தி பெரிய நகைமுரண்.
திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க தனுஷ்தான் இந்தப்
படத்தில் பெரிய பலம். ரவுடியாக வெடிப்பது, சாதுவாக உருகுவது, கோபத்தில் கொப்பளிப்பது, ஒருதலையாகக் காதலிக்கும் சாய் பல்லவியைக் கலாய்ப்பது என தனுஷ் படம் முழுவதும் தன் ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறார். ‘அராத்து ஆனந்தி’யாக ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவி, அமர்க்களப்படுத்தியிருக்கிறார். துரத்திக் காதலிப்பதிலும், செண்டிமென்ட் காட்சியிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சென்னை ஆட்டோ ஓட்டுநர்களுக்கே உரிய அவரது உடல்மொழியும் கச்சிதம்.
தனுஷின் நண்பராக வரும் கிருஷ்ணாவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வரும் வரலட்சுமியும், போலீஸாக வரும் ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகமாகியிருக்கும் டொவினோ தாமஸ் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். ஆனால், ரவுடிக்குரிய உடல்மொழி அவரிடம் மிஸ்ஸிங். தனுஷூக்கு வலது, இடதுவாக பகடிப் பேர்வழிகளாக வருகிறார்கள் ரோபோ சங்கரும் வினோத்தும். படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா. பின்னணி இசையை சிறப்பாகச் செய்திருக்கிறார்.
'மாரி’ படமே பராவாயில்லை என்று சொல்ல வைத்ததுதான் ‘மாரி 2’வின் வெற்றி.
மதிப்பெண்: 1.5 / 5

No comments:
Post a Comment