அரசியல் கட்சியை யார் முதலில் தொடங்குவது என்ற கோதாவில் கமலஹாசன் முந்திக்கொண்ட நிலையில், ரஜினி எப்போது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவரோ புதுப்பட அறிவிப்பை வெளியிட்டிருப்பது ரஅவரது ரசிகர்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது.
1996-களில் இருந்தே, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ரஜினியிடம் கேட்டால், ‘ஆண்டவன்தான் சொல்லணும்’ என்று மேலே கையைக் காட்டிவிட்டுச் செல்வதே ரஜினியின் பதிலாக இருந்தது. கமலோ, ‘தனக்கும் அரசியலுக்குமான உறவு என்பது தேர்தலில் ஓட்டுப் போடுவதோடு சரி’ என்று தத்துவார்த்தம் பேசிவந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் சுகவீனத்துக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றங்களால் கமலுக்கும் ரஜினிக்கும் திடீர் அரசியல் ஞானதோயம் ஏற்பட்டது.
அதிமுக அமைச்சர்களுடன் ட்விட்டரில் லாவணிப் பாடிக்கொண்டிருந்த கமல், அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தயாரானார். ஏற்கனவே ‘சிஸ்டம் கெட்டுவிட்டது’ என்று பேசி அரசியல் ஆசையை வேறுவழியாக வெளிப்படுத்திய ரஜினி, டிசம்பர் இறுதியில் ‘அரசியலில் குதிக்கப் போவதாகவும், வரும் சட்டப்பேரவை ஜனநாயகப் போரில் தமது படையும் இருக்கும்’ என்றும் அறிவித்தார். அதோடு அரசியலில் கட்டமைப்பை ஏற்படுத்தும்விதமாக ரஜினி மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளார். அவ்வப்போது ரஜினி மன்ற நிர்வாகிகளை நியமித்தபடி இருக்கிறார். ரசிகர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடுவது எனவும் போய்க்கொண்டிருக்கிறது ரஜினியின் நடவடிக்கை.
ஏற்கனவே தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிவிட்ட கமலுக்கு அந்த வேலையெல்லாம் கிடையாது. நேரிடையாகவே அரசியல் கட்சியைத் தொடங்கும் வேலையை முன்னெடுத்தார். கேரளா, மேற்கு வங்காளம், டெல்லி மாநில முதல்வர்களுடன் சந்திப்பைத் தொடர்ந்து, கருணாநிதி, நல்லக்கண்ணு, விஜயகாந்த், டிஎன் சேஷன் போன்றவர்களைச் சந்தித்து ஆசிப் பெற்று கட்சி தொடங்க நாள் குறித்தார். கடந்த மாதம் பிப்ரவரி 21 அன்று மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தையும் தொடங்கிவிட்டார் கமல். அதோடு மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி, ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கட்சியை அறிவித்து, தன் கட்சியின் உயர்மட்ட குழுவினரையும் அறிமுகப்படுத்திவைத்தார். தனது கட்சி கொடியையும் ஏற்றிவைத்து கமல் உரையாற்றினார். ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2’, ‘சபாஷ் நாயுடு’ போன்ற படங்களை முடித்துவிட்ட கமல், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார்.
கமல் இப்படி ஜெட் வேகத்தில் செல்லும் வேளையில் ரஜினி எந்தத் திசையில், எப்படிப் பயணிப்பார் என்ற கேள்விகள் எழுந்தன. ஏற்கனவே ‘2.0’, ‘காலா’ போன்ற படங்களை முடித்துவிட்ட ரஜினியின் முழுப் பார்வையும் அரசியல் மீது பதியும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், கமலைப் போலவே ரஜினியும் இனி படத்தில் நடிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று சொல்லப்பட்டது. கமலின் அரசியல் வேகத்தால், ரஜினியும் தன் கட்சிப் பெயரை அறிவிப்பார் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், உடனடியாக எந்த அறிவிப்பும் ரஜினியிடமிருந்து வெளிப்படவில்லை. தொடர்ந்து ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திவந்த ரஜினி, திடீரென தற்போது புதுப் பட அறிவிப்பை வெளியிட்டு அவரது ரசிகர்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
‘ஏற்கனவே என் பாணி வேறு; கமல் பாணி வேறு’ என்று சொல்லிவரும் ரஜினி, அவரைப் போல உடனடியாகக் கட்சி, அரசியல் என இறங்காமல், பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது மூலம் அவர் பாணி வெளிப்பட்டுள்ளது. வழக்கமாக ரஜினியின் புதுப்பட அறிவிப்பு வெளியானால், சமூக ஊடங்களில் அது எதிரொலிக்கும். ஆனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் பட அறிவிப்பு வெளியாகியும், சமூக ஊடங்களிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பைக் காணவில்லை. அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்த்த வேளையில், ரஜினியின் இந்தப் பட அறிவிப்பு எட்டிக் காயாகக் கசந்திருக்கும் என்று நம்பலாம்.
ரஜினியின் புதுப்பட அறிவிப்பு மூலம் இந்த ஆண்டு முழுவதும் அவர் படத்தில் பிஸியாகவே இருக்க வாய்ப்புண்டு. அப்படியானால், ரஜினி என்ன சொல்லவருகிறார் என்பதை நினைத்து, அவரது ரசிகர்கள் குழம்பிவருகின்றனர். ‘சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகக் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவோம்’ என்று ரஜினி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று அறிவித்துவிட்ட ரஜினி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்பதும் அவர் ஏற்கனவே சொன்னதுதான்.
தற்போது புதிதாகப் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதன் மூலம் அரசியல் கட்சி அறிவிப்பு இப்போதைக்கு இல்லை என்பதைத் தெளிவாகவே உணர்த்தியிருக்கிறார் ரஜினி. சிரஞ்சீவி, விஜயகாந்த் ஆகியோர் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டு, தேர்தலிலும் போட்டியிட்டார்கள். ஆனால், ரஜினி அரசியலில் இறங்கப்போவதாகச் சொல்லிவிட்டு, ‘மன்றங்களைக் கட்டமைக்கிறேன்’ என்று நீண்ட கால அவகாசம் எடுத்துக்கொள்வதைப் பார்த்தால், ரசிர்களைத் திருப்திப்படுத்தவும், அவரது படங்களுக்காக அவர் வழக்கமாக சொல்லும் பழைய பல்லவிதான் என்ற விமர்சனத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும் வாய்ப்பும் உண்டு.
போர் என்பது சொல்லிவிட்டு வராது; அது கொரில்லா போராகக்கூட இருக்கலாம். போர் திடீரென வந்தால், ரஜினி என்ன செய்வார்? கமல் மக்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், ரஜினி தனது புதுப் படத்தை முடித்துவிட்டு அரசியல் கட்சியைத் தொடங்குவாரா அல்லது மீண்டும் இன்னொரு புதுப் பட அறிவிப்பை வெளியிடுவாரா போன்ற கேள்விகள் அவரது ரசிகர்களிடம் எழாமல் இல்லை!
- 01/03/2018

No comments:
Post a Comment