கோவில்பட்டி அருகே வடக்கூர், தெற்கூர் என இரண்டாகப் பிரிந்துகிடக்கிறது ஊர். இரண்டு மகன்கள், ஒரு மகள் எனப் பாசமான குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார் சிவசாமி (தனுஷ்). வடக்கூரைச் சேர்ந்த நில பண்ணையார் வடக்கூரான் (ஆடுகளம் நரேன்) தெற்கூரில் உள்ள நிலங்களை ஏமாற்றி வாங்கி வைத்திருக்கிறார். சாதுவான தனுஷ் குடும்பம் மட்டும் நிலத்தை தர மறுத்து உரிமை போராட்டம் நடத்துகிறது. இதனால் இரு குடும்பத்துக்கும் பகை, உரசல். இந்த மோதலில் இரு குடும்பத்திலும் கொலை விழுகிறது. இதனால் தனுஷ் குடும்பத்தை அழிக்க வில்லன் கூட்டம் அலைகிறது. போலீஸும் துரத்துகிறது. இந்தப் போராட்டத்தில் தனுஷ் அவருடைய குடும்பத்தைக் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் ‘அசுரன்’ படத்தின் கதை.
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ வரிசையில் நான்காவது முறையாக ‘அசுர’னில் இறங்கி அடித்திருக்கிறது வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி. ‘வெக்கை’ நாவலின் கதையை சினிமாவுக்கு ஏற்ப திரைக்கதையாக்கி, கமர்ஷியலைக் கொஞ்சம் தூவி அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். 80-களில் தொடங்கும் கதை, 60-களில் பயணித்து மீண்டும் 80-க்குள் வந்து படத்தை நிறைவு செய்திருக்கும்விதமும், ஒரு படத்துக்குள் இரண்டு பீரியட் கதைகளைச் சொன்னவிதமும் அட போட வைக்கின்றன.
அந்தக் காலகட்டத்தில் நிலவிய நிலப் பண்ணையார்களின் நிலத் தகராறு, பஞ்சமி நிலப் பறிப்பு, சாதிய ஒடுக்குமுறை ஆகியவற்றையும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதையையும் இயக்குநர் வெளிச்சம் போட்டுகாட்டியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், அவர்களிடம் மண்டிக் கிடக்கும் சாதிய வன்மத்தையும் படம் உரக்கப் பேசியிருக்கிறது. கிளைமாக்ஸில், ‘நம்மிடமிருந்து பறித்துக்கொள்ள முடியாத ஒரே விஷயம் படிப்பு மட்டும்தான்’ என்று பொட்டில் அடித்தாற்போல் தனுஷ் பேசும் காட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் வலிமிகுந்த துயரத்தை வெளிப்படுத்துகிறது. நிலத் தகராறு, சாதிய பாகுபாடு எனப் பெரும் பகுதிகளை சாதிய குறியீடு இல்லாமல் வெற்றி மாறன் படமாக்கியவிதமும் அருமை.
வழக்கமான பழிக்குப் பழி வாங்கும் கதையில் முதலில் நாயகனை சாதுவாகவும், ஃபிளாஸ்பாக்கில் அதிரடி காட்டும் வீரனாகவும் காட்டும் உத்திக்கு வெற்றி மாறனும் தப்பவில்லை. அதற்கான காரணங்களை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு இயக்குநர் நகர்ந்துவிடுகிறார். தனுஷுக்கு
திருமணம் செய்து வைக்கும் வயதில் மகன் இருக்கிறான் என்ற கதாபாத்திரத்துக்கு தனுஷின் ஒப்பனைகளும் உடல்மொழியும் தொடக்கத்தில் ஒட்ட மறுக்கின்றன. அந்த மகன் சீக்கிரம் இறந்துவிடுவான் என்ற ஊகிக்க முடிவது மைனஸ். படம் முழுவதும் வெட்டு, குத்து, ரத்த சகதி எனக் காட்டப்படுகிறது. இளைஞன் தலையில்லாமல் கிடக்கும் காட்சி, துண்டிக்கப்பட்டு கிடக்கும் கை, படத்தில் அவ்வப்போது விழும் வட்டார கெட்ட வார்த்தைகளை தணிக்கைக் குழு எப்படி அனுமதித்தது எனத் தெரியவில்லை.
ஈட்டியில் ஒரே குத்தில் வில்லன் சாகிறான். நாயகனுக்கு நெஞ்சில் ஈட்டி பாயந்தாலும் எழுந்து நிற்கிறான். இதுபோன்றவழக்கமான டெம்ப்ளேட் கிளிஷேக்கள் படத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. பல கொலைகளை செய்துவிட்டு தலைமறைவாக இருப்பது, குறைந்த தண்டனையுடன் சிறையிலிருந்து வருவதாக சொல்வது போன்ற வலுவில்லாதக் காட்சிகளும் படத்தில் வந்துசெல்கின்றன. பீரியட் படங்கள் எனக் காட்டுவதற்கு பழைய போன், படபோஸ்டர் என வழக்கமான உத்திகளையே இயக்குநர் காட்டுவதும் அலுப்பூட்டிவிடுகிறது.
சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் படத்தை முழுவதும் தாங்கிப் பிடித்திருக்கிறார் தனுஷ். பிள்ளைகளுக்கு பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலைவன், பிளாஸ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளைஞன் என ஒவ்வொரு காட்சிகளிலும் தனுஷ் மிளிர்ந்திருக்கிறார். நாயகியாக வரும் மஞ்சு வாரியார் எளிய குடும்பத் தலைவியாகவும் பாசமான அம்மாவாகவும் அழகான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் வழக்கறிஞராக பிரகாஷ் ராஜ் வழக்கமாக கலக்கியிருக்கிறார். உரிமை முழுக்கத்தில் வெடித்து கிளம்பும் தனுஷின் மூத்த மகனாக டிஜே அருணாச்சலம், தனுஷை கையாலாகத அப்பாவாக நினைக்கும் இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஷும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.
தனுஷின் மச்சானாக பசுபதியும், நிலப் பண்ணையாராக ‘ஆடுகளம்’ நரேன், சாதிய துவேஷங்களைக் கட்டவிழ்த்துவிடும் பண்ணையாராக ஏ. வெங்கடேஷ், போலீஸ் அதிகாரியாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், தனுஷின் காதலியாக அம்மு அபிராமி என படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறைவாக செய்திருக்கின்றன. படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ். பாடல்களைத் தாண்டி பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். படத்துக்கு ஒளிப்பதிவு வேல்ராஜ். கோவில்பட்டி தேரிக்காட்டை கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
சாதிய வன்மங்கங்களில் பழிக்குப் பழி வாங்கும் குரூர மனித உணர்வுகளை சொல்லிய விதத்தில் சில குறைகள் இருந்தாலும் ‘அசுரன்’ மிடுக்காக இருக்கிறான்.
மதிப்பெண்: 3.5 / 5

No comments:
Post a Comment