தமிழ் சினிமாவில் அறிமுக நாயர்களைவிட வில்லன்கள் பெயரெடுப்பது எப்போதாவதுதான் நிகழும். அண்மையில் வெளியான படத்தின் மூலம் அப்படி ஒரு வில்லன் பேசப்பட்டார். சைக்கோ கொலையாளியாக ‘ராட்சசன்’ படத்தில் மிரட்டிய சரவணன்தான் அந்த வில்லன். ‘நான்’ சரவணன் என்ற இதுவரை அழைக்கப்பட்டு வந்த அவர், இந்தப் படத்துக்குப் பின் ‘ராட்சசன்’ சரவணனாக மாறியிருக்கிறார். அவரை ஒரு மாலை வேளையில் சந்தித்திலிருந்து...
உங்கள் பின்னணி என்ன?
அரியலூர்தான் எனக்கு சொந்த ஊர். வேலை நிமித்தமாக அப்பா திருச்சிக்கு மாறியதால், அங்கேதான் என்னுடைய படிப்பு, வாழ்க்கை எல்லாம் நகர்ந்தது. கல்லூரியை முடித்த பிறகு 7 ஆண்டுகள் மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்தேன். வாழ்க்கையில் பிடித்ததை செய்ய வேண்டும் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டேயிருந்தது. என்னெ செய்யலாம் என யோசித்தபோது, சினிமாவுக்கு செல்லும் எண்ணம் வந்தது. எனது தந்தை ஒரு நாடகக் கலைஞர். அந்த வகையில் நாடகம், சினிமா மீது எனக்கும் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்தோடு 2004-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.
சினிமா வாய்ப்பு எப்படி கிடைத்தது?
சென்னைக்கு வந்தபிறகு படியேறாத படக் கம்பெனிகளே இல்லை. நான் வாய்ப்பு தேடிய காலத்தில் ‘பருத்தி வீரன்’, ‘களவாணி’ போன்ற கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களே வந்தன. என் தோற்றத்துக்கேற்ப கதைகளைத் தேடினேன். ஒரு சினிமா பி.ஆர்.ஓ.வின் உதவி கிடைத்தது. சினிமா உலகத்தைப் பற்றி அவர் எனக்கு நிறைய விஷயங்களைச் சொன்னார். அதைப் பின்பற்றியபோது நிறைய படங்களில் ஒரு சில சீன்களில் வருவதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி பார்த்தால், 2009-ல் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’தான் என் முதல் படம். ‘நான்’, ‘மவுனகுரு’ போன்ற படங்கள் ஓரளவு முகம் தெரிய வைத்தன.
‘ராட்சசன்’ படத்துக்குள் எப்படி நுழைந்தீர்கள்?
சினிமா தவிர்த்து நிறைய குறும்படங்களில் நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு முறை குறும்படத்துக்கு டப்பிங் பேச சென்றபோதுதான், இயக்குநர் ராம்குமார் அறிமுகம் கிடைத்தது. ‘முண்டாசுப்பட்டி’ படத்தை அவர் இயக்கியபோது, அந்தப் படத்தில் என்னுடைய நண்பர்கள் காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றவர்கள் நடித்தார்கள். அந்தப் படத்தில் எனக்கு ஏற்ற கதாபாத்திரம் அமையவில்லை. இருந்தாலும் இயக்குநருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தேன். ‘ராட்சசன்’ படத்தை அவர் இயக்கும் முயற்சியில் இருந்தபோது அவரைப் போய் பார்த்தேன். முதலில் போலீஸ் கதாபாத்திரத்துக்குத்தான் கூப்பிட்டார்கள். இப்படித்தான் ‘ராட்சசன்’ படத்துக்குள் நுழைந்தேன்.
சைக்கோ கொலைக்காரப் பாத்திரத்துக்கு உங்களை எப்படி இயக்குநர் தேர்வு செய்தார்?
அதற்கு என்னுடைய தோற்றம் பொருந்தியதுதான் முதல் காரணம். அது மட்டுல்ல, பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன்போல இருந்ததும் பெர்ணான்டோ கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்தது இன்னொரு காரணம். இயக்குநர் எனக்கு நிறைய ‘ஆடிசன்’ வைத்தார். அதில் எல்லாம் தேறினேன். அந்தக் கதாபத்திரத்துக்கு முழுமையாக நான் பொருந்துவேன் என்ற நம்பிக்கை இயக்குநருக்கு வந்த பிறகே சைக்கோ கதாபாத்திரத்துக்கு என்னை இயக்குநர் ‘டிக்’ செய்தார்.
அந்தப் பாத்திரத்துக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்ததோ?
படத்துக்காக எவ்வளவு அளவுக்கு உடல் எடையைக் குறைக்க முடியுமோ, அந்த அளவுக்குக் குறைக்கச் சொன்னார்கள். இந்தப் படத்துக்காக 62 கிலோ எடையிலிருந்து 43 கிலோவுக்கு எடையைக் குறைத்தேன். படத்தில் மேஜிக் காட்சிகளும் பிரதானம் என்பதால், அந்தக் கலையை ஒரு மாதத்துக்கு மேல் கற்றுக்கொண்டேன். தயா என்ற மேஜிக் கலைஞர்தான் எனக்கு அந்தக் கலையை கற்றுக்கொடுத்தார். சைக்கோ கதாபாத்திரத்துக்கும், அம்மா கதாபாத்திரத்துக்கும் தினமும் நான்கரை மணி நேரம் மேக்கப் போடுவார்கள். அதற்காக சூட்டிங் இருக்கும் காலத்தில் அதிகாலையிலேயே வந்துவிடுவேன். இயக்குநர் சொன்ன எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டேன்.
நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தில் உங்கள் உண்மையான முகம் ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று வருத்தம் ஏற்பட்டதா?
உண்மையில் எந்த வருத்தமும் எனக்கு இல்லை. படத்தில் வசனம் இல்லை என்றும் நான் வருந்தவில்லை. ‘ராட்சசன்’ படத்தில் சைக்கோ கதாபாத்திரம்தான் மிக முக்கியமானது என்பதை தெரிந்துகொண்ட பிறகு அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். இந்தப் படம்தான் என்னுடைய வாழ்க்கை என்பதால், இயக்குநர் சொன்னா அனைத்தையும் செய்தேன். ஒரு நல்ல வாய்ப்புக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்தேன். அதைப் பிடித்துதான் முன்னேற வேண்டும் என்ற நிலையில், மற்றதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.
தவிர, இந்தப் படத்தில் சரவணன் முகம் தேவைப்படவில்லை. ஆங்கிலோ இந்தியன் முகம்தான் தேவை. ஆங்கிலோ இந்தியன் தாய் - மகன்தான் கதையே. உடல்மொழியால் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது என் வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் இயக்குநர் சொன்னதை மட்டுமே நான் செய்தேன். படத்தைப் பார்த்து யார் இந்த வில்லன் என்று ரசிகர்கள் கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். படம் வெளியான பிறகு நான் நினைத்ததுபோலவே நடந்தது. அதுவே எனக்கு பெரிய மகிழ்ச்சிதான்.
இந்தப் படம் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது?
என்னுடைய 14 ஆண்டுகள் கஷ்டம் இந்த ஒரு படம் மூலம் தீர்ந்தது. மிகவும் நேசித்த ஒரு துறையில் ஓரிடத்தைப் பிடித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய மதில் சுவரை மட்டுமே இத்தனை ஆண்டுகளாகச் சுற்றிச்சுற்றி வந்தவனுக்கு வாசல் திறந்ததைப் போல உணர்கிறேன்.
‘ராட்சசன்’ படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்களில் மறக்க முடியாத பிரபலம் யார்?
ரஜினி, அஜித் ஆகியோர் வாழ்த்தியதை மறக்க முடியாது. யார் அந்த வில்லன், அவரோட உடல்மொழி ரொம்ப ஸ்டைல்லா இருக்கே என்று ரஜினி சொன்னதைப் பெருமையாக நினைக்கிறேன். ஸ்டைலுக்கே உதாரணமாகச்சொல்லக்கூடிய ரஜினி வாயிலிருந்து கிடைத்த பாராட்டு என்பதால் இதை மறக்க முடியாது. அஜித் அவருடைய மேனேஜரிடம் வில்லன் யார், உண்மையிலேயே வெளிநாட்டுக்காரரா, அவருடைய வில்லன் ஸ்டைல் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு பாரட்டையும் நான் உச்சபச்ச வாழ்த்தாக கருதுகிறேன்.
சரவணன் நிஜத்தில் எப்படி?
நிஜத்தில் சரவணன் மிகவும் சாது. இயக்குநர் என்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தும்போதுகூட, அந்தக் கதாபாத்திரத்துக்கு நேர் எதிரானவர் என்று என்னை அறிமுகப்படுத்தினார். மிகவும் இளகிய மனம் படைத்த ஆள் நான். நடிப்பு என்று தெரிந்தே படம் பார்க்கும்போது சென்டிமெண்ட் காட்சியில் என்னை அறியாமல் அழுதுவிடுவேன்.
‘ராட்சசன்’ வரவேற்புக்கு பின்னர் புதிய பட வாய்ப்புகள் வந்துள்ளனவா?
இரண்டு பட வாய்ப்புகள் வந்துள்ளன. இனி வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இயக்குநர் ராம்குமார் என்னை நம்பி வாய்ப்பு கொடுத்ததுபோல எந்த இயக்குநர் வாய்ப்பு கொடுத்தாலும், எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்.
- இந்து தமிழ், 23/11/2018

![]() |
சரவணன் |

No comments:
Post a Comment