சமீபத்தில் கடலூரையும், புதுச்சேரியையும் புரட்டிப் போட்டுவிட்டுச் சென்ற ‘தானே’ புயல் பெயர் தானாக வந்ததல்ல. மியான்மர் கொடுத்த பெயர். புயல்களுக்கு பெயர் சூட்டும் பழக்கம் எப்படித் தோன்றியது? இதற்கு ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது!
கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கத்தை தொடங்கியவர்கள் ஆஸ்திரேலியர்களே. சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கத்தை தொடங்கிவிட்டார்கள. ஏதோ பெருமைக்காக இந்தப் பெயரை அவர்கள் சூட்டவில்லை. பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவின் சின்னமாக உருவகப்படுத்த இப்படி பெயர் வைக்க ஆரம்பித்தனர் ஆஸ்திரேலியர்கள். 1950&களில் இந்த வழக்கத்தை அமெரிக்கா ‘சுட்டு’ தங்கள் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்க ஆரம்பித்தது. இப்படி ஆளாளுக்கு பெயர் சூட்டுவதைத் தடுக்க, சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம், புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன் படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை அறிமுகமானது.
இந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவா கும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப் பட்டது. இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த பிராந்தியத்தில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்துக் கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொரு புயலுக்கும் சூட்டப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு 2004ம் ஆண்டில் இருந்து பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டு களில் 5 முறை புயல்கள் ஏற்பட் டன. அந்த புயல்களுக்கு பட்டிய லில் உள்ள வரிசைப்படி லைலா, பந்த், பெட், கிரி, ஜல் என பெயர் கள் சூட்டப்பட்டன. இதில் ‘லைலா’ பெயரை பாகிஸ்தான், ‘பந்த்’ பெயரை இலங்கை, ‘பெட்’ பெயரை தாய்லாந்து, ‘கிரி’ பெயரை வங்கதேசம், ‘ஜல்’ பெயரை இந்தியா வும் தேர்வு செய்து கொடுத்தன. இதில் லைலா மற்றும் ஜல் புயல்கள் சிறிது பரபரப்பை ஏற்படுத்தின.
2011ம் ஆண்டு சீசனில் அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புய லுக்கு மாலத்தீவு தேர்வு செய்து கொடுத்த ‘கெய்லா’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக சமீபத்தில் ஏற்பட்ட புயலுக்கு ‘தானே’ என்ற பெயர் சூட்பப்பட்டது. இப் பெயரை வழங்கியது மியான்மர். அந்நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரைக் குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டது.
இந்த வரிசையில் வங்கக் கடலில் அடுத்து புயல்கள் ஏற்பட்டால் என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதும் வரிசைப்படி 1 முடிவாகி விட்டன. அந்தப் பெயர்கள் என் னென்ன? முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (பாகிஸ்தான்).
- முத்தாரம், 12-01-2012

No comments:
Post a Comment