அக்டோபர் 9 அன்று அமெரிக்காவின் நாசா பரபரப்புடன் இருந்தது. விஞ்ஞானிகள் முகத்தில் ஏக டென்ஷன். பார்வையாளர்கள் படையெடுத்து வர நாசா அரங்கமே அல்லோலகல்லோலப்பட்டது. இந்தப் பரபரப்புக்குக் காரணம், ‘மோதி விளையாடு’ கான்செப்ட். யாருடன்? நிலவுடன்!
நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதற்கு நிலவையே உரசிப் பார்ப்பது என்றால் சும்மாவா? இதை வெற்றிகரமாக முடித்திருகின்றனர் நாசா விஞ்ஞானிகள். நிலவுடன் மோதும் இத்திட்டத்தால் என்ன பயன்? இதனால் விபரீதங்கள் ஏற்படுமா?
அரை நூற்றாண்டு காலமாக நிலவுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கின்றானர் அமெரிக்கர்கள். 40 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக நிலவில் காலடி வைத்தனர் இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள். நிலவில் வளங்கள் இருக்கின்றனவா? தண்ணீர் இருக்கிறதா? அங்கு மனிதர்கள் வாழ முடியுமா? இதுபோன்ற விஷயங்களை அறிவதற்காக அப்போதிருந்தே ஆய்வு செய்கிறது நாசா. 2008-ல் நிலவுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 1’ அங்கு தண்ணீர் இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
இதற்கு முன்பே, 2006-ல் ‘நிலவில் நீர்’ ஆய்வைத் தொடங்கிவிட்டது அமெரிக்கா. இதற்காக எல்கிராஸ் (Lunar Observation and Sensing Satellite) என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது நாசா. இந்த ஆண்டு ஜூன் 18 அன்று ‘அட்லஸ் 5’ என்ற ராக்கெட்டுடன் எல்கிராஸ் நிலவை நோக்கிப் பயணமானது. அதோடு ‘செண்டார்’ என்ற குட்டி ராக்கெட்டும் பயணித்தது. சர்ச்சைகளையும் சுமந்தே பயணித்த இவை, அக்டோபர் மாதத்தில் நிலவுடன் மோத வேண்டும் என்பதே நாசாவின் திட்டம்.
நிலவின் மேற்பரப்பு முழுக்க சூரிய வெளிச்சம் படும் பாலைவனப் பகுதி. கீழ்ப்பகுதிக்கான தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் படாது. இது கரடுமுரடான பகுதியா, பாலைவனமா என்பதும் யாருக்குமே தெரியாது. ஆனால், அங்கு ஹைட்ரஜன் இருப்பது மட்டும் ஏற்கனவே உறுதியாகியுள்ளது. கூடவே ஆக்சிஜனும் இருந்துவிட்டால்? தண்ணீர் இருப்பது உறுதியாகிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளின் கணிப்பு. இதை உறுதி செய்வதற்காகவே நிலவுடன் மோதும் திட்டத்தைத் தயாரித்தனர் விஞ்ஞானிகள். திட்டமிட்டப்படி அக்டோபர் 8 அன்று எல்கிராஸும் செண்டாரும் தனித்தனியாகப் பிரிந்தன.
இதை நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘இன்ச் பை இன்ச்’சாக கவனித்துகொண்டிருந்தனர் விஞ்ஞானிகள். செண்டார் தனியாகப் பிரிந்ததும் மணிக்கு 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கிப் பறந்தது. 9-ம் தேதி காலை அமெரிக்க நேரப்படி 11.30 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் மோதிச் சிதறியது. இதன் எடை 2 ஆயிரத்து 370 கிலோ. இவ்வளவு எடையுள்ள பொருள் நிலவுடன் மோதியது மிகப் பெரிய பள்ளம் உருவானது.
செண்டாரைப் பின்தொடர்ந்து எல்கிராஸும் நிலவை நோக்கி வேகமாகப் பயணித்தது. செண்டார் நிலவுடன் மோதியவுடன் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து எல்கிராஸில் பொருத்தப்பட்டிருந்த நவீன கேமராக்கள் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பின. சில நிமிடங்கள் கழித்து எல்கிராஸும் 2 கி.மீ. தள்ளி இன்னொரு இடத்தில் மோதியது. இவை அனைத்தும் வெற்றிகரமாக நடந்தேறின. இந்நிகழ்ச்சி நாசாவின் வெப்சைட்டில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிலவுடன் மோதும் திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்து?
“ராக்கெட் மோதல்களின் விளைவுகளை கண்காணிக்க வேறொரு விண்கலம் அனுப்பப்பட உள்ளது. ராக்கெட் மோதலில் 90 மீட்டர் ஆழத்துக்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மோதி வெடித்துச் சிதறிய பாகங்கள், நெருப்புத் துகள்கள் 30 மைல் தூரம் வரை விழுந்துள்ளன. இவை விழுந்த இடத்தில் ஐஸ் இருந்தால், அது உருகி ஒடும். இதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்” என்கிறார் இத்திட்ட மேலாளர் டேனியல் ஆண்ட்ரூஸ்.
‘இது நிலவு மீதான தாக்குதல். இதனால் நிலா வெளிச்சம் பூமிக்கு வராமல் போக வாய்ப்பு உண்டு. இப்படி மிகப் பெரிய மோதலை ஏற்படுத்தும்போது பின்விளைவுகளை ஆராயாமல் செய்துள்ளனர்” என்று பொரிந்து தள்ளுகின்றனர் இன்னொரு பிரிவு விஞ்ஞானிகள்.
நிலவில் ராக்கெட் மோதி இத்தனை நாட்கள் கடந்த நிலையிலும் இப்படி ஒரு ரிப்போர்ட் பதிவாகவில்லை என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். “ நிலவில் அடிக்கடி விண்கற்கள் விழுந்துள்ளன. அதுமட்டுமல்ல, நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டக்காலம் முடிந்ததும் நிலவுடன் மோதுவது வாடிக்கையான நிகழ்வு அதுபோலத்தான் இதுவும். இப்போது நடந்துள்ள மோதலால் நிலவுக்கு எந்தப் பாதிப்பும் வராது. நிலவில் மோதிய இடத்தையும் அதனால் ஏற்பட்ட பள்ளத்தையும் நாசாவில் இருந்து அமெச்சூர் டெலஸ்கோப் மூலம் கண்காணிக்கிறோம். பூமியில் இருந்து எந்த நாட்டு விஞ்ஞானியும் ‘ஃபால்மர் 200 இன்ச் டெலஸ்கோப்’ மூலம் நிலவைக் கண்காணிக்க முடியும். எனவே, பீதி தேவையில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
“நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை முதலில் உறுதிப்படுத்தியது ‘சந்திரயான் - 1’தான். இப்போது நாசா மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் நிரூபணம் ஆகும்போது இது மிகப்பெரிய கண்டுபிடிப்புத் திட்டமாகக் கருதப்படும்” என்று கூறியுள்ளார் நாசா இயக்குநர் பீட் வொர்டன்.
நிலம், தண்ணீர், காற்று என மூன்றும் இருந்தால் நிலவில் மனிதர்களைக் குடியமர்த்திவிடலாம் என்று பரபரக்கின்றனர் அமெரிக்கர்கள். நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகுமா? இதை விரைவிலேயே இந்த ஆய்வு சொல்லிவிடும். எதற்கும் நிலவில் ஃபாளட் பார்த்து வைப்பது நல்லது!
முத்தாரம், 26-10-2009
நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதற்கு நிலவையே உரசிப் பார்ப்பது என்றால் சும்மாவா? இதை வெற்றிகரமாக முடித்திருகின்றனர் நாசா விஞ்ஞானிகள். நிலவுடன் மோதும் இத்திட்டத்தால் என்ன பயன்? இதனால் விபரீதங்கள் ஏற்படுமா?
அரை நூற்றாண்டு காலமாக நிலவுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கின்றானர் அமெரிக்கர்கள். 40 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலாக நிலவில் காலடி வைத்தனர் இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள். நிலவில் வளங்கள் இருக்கின்றனவா? தண்ணீர் இருக்கிறதா? அங்கு மனிதர்கள் வாழ முடியுமா? இதுபோன்ற விஷயங்களை அறிவதற்காக அப்போதிருந்தே ஆய்வு செய்கிறது நாசா. 2008-ல் நிலவுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 1’ அங்கு தண்ணீர் இருப்பதை சமீபத்தில் உறுதிப்படுத்தியது.
இதற்கு முன்பே, 2006-ல் ‘நிலவில் நீர்’ ஆய்வைத் தொடங்கிவிட்டது அமெரிக்கா. இதற்காக எல்கிராஸ் (Lunar Observation and Sensing Satellite) என்ற செயற்கைக்கோளை வடிவமைத்தது நாசா. இந்த ஆண்டு ஜூன் 18 அன்று ‘அட்லஸ் 5’ என்ற ராக்கெட்டுடன் எல்கிராஸ் நிலவை நோக்கிப் பயணமானது. அதோடு ‘செண்டார்’ என்ற குட்டி ராக்கெட்டும் பயணித்தது. சர்ச்சைகளையும் சுமந்தே பயணித்த இவை, அக்டோபர் மாதத்தில் நிலவுடன் மோத வேண்டும் என்பதே நாசாவின் திட்டம்.
நிலவின் மேற்பரப்பு முழுக்க சூரிய வெளிச்சம் படும் பாலைவனப் பகுதி. கீழ்ப்பகுதிக்கான தென் துருவத்தில் சூரிய வெளிச்சம் படாது. இது கரடுமுரடான பகுதியா, பாலைவனமா என்பதும் யாருக்குமே தெரியாது. ஆனால், அங்கு ஹைட்ரஜன் இருப்பது மட்டும் ஏற்கனவே உறுதியாகியுள்ளது. கூடவே ஆக்சிஜனும் இருந்துவிட்டால்? தண்ணீர் இருப்பது உறுதியாகிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளின் கணிப்பு. இதை உறுதி செய்வதற்காகவே நிலவுடன் மோதும் திட்டத்தைத் தயாரித்தனர் விஞ்ஞானிகள். திட்டமிட்டப்படி அக்டோபர் 8 அன்று எல்கிராஸும் செண்டாரும் தனித்தனியாகப் பிரிந்தன.
இதை நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ‘இன்ச் பை இன்ச்’சாக கவனித்துகொண்டிருந்தனர் விஞ்ஞானிகள். செண்டார் தனியாகப் பிரிந்ததும் மணிக்கு 9 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் நிலவை நோக்கிப் பறந்தது. 9-ம் தேதி காலை அமெரிக்க நேரப்படி 11.30 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் மோதிச் சிதறியது. இதன் எடை 2 ஆயிரத்து 370 கிலோ. இவ்வளவு எடையுள்ள பொருள் நிலவுடன் மோதியது மிகப் பெரிய பள்ளம் உருவானது.
செண்டாரைப் பின்தொடர்ந்து எல்கிராஸும் நிலவை நோக்கி வேகமாகப் பயணித்தது. செண்டார் நிலவுடன் மோதியவுடன் ஏற்பட்ட வெளிச்சத்தை வைத்து எல்கிராஸில் பொருத்தப்பட்டிருந்த நவீன கேமராக்கள் படங்களை எடுத்து நாசாவுக்கு அனுப்பின. சில நிமிடங்கள் கழித்து எல்கிராஸும் 2 கி.மீ. தள்ளி இன்னொரு இடத்தில் மோதியது. இவை அனைத்தும் வெற்றிகரமாக நடந்தேறின. இந்நிகழ்ச்சி நாசாவின் வெப்சைட்டில் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நிலவுடன் மோதும் திட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்து?
![]() |
நிலவில் மோதிய இடம் |
‘இது நிலவு மீதான தாக்குதல். இதனால் நிலா வெளிச்சம் பூமிக்கு வராமல் போக வாய்ப்பு உண்டு. இப்படி மிகப் பெரிய மோதலை ஏற்படுத்தும்போது பின்விளைவுகளை ஆராயாமல் செய்துள்ளனர்” என்று பொரிந்து தள்ளுகின்றனர் இன்னொரு பிரிவு விஞ்ஞானிகள்.
நிலவில் ராக்கெட் மோதி இத்தனை நாட்கள் கடந்த நிலையிலும் இப்படி ஒரு ரிப்போர்ட் பதிவாகவில்லை என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். “ நிலவில் அடிக்கடி விண்கற்கள் விழுந்துள்ளன. அதுமட்டுமல்ல, நிலவுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் திட்டக்காலம் முடிந்ததும் நிலவுடன் மோதுவது வாடிக்கையான நிகழ்வு அதுபோலத்தான் இதுவும். இப்போது நடந்துள்ள மோதலால் நிலவுக்கு எந்தப் பாதிப்பும் வராது. நிலவில் மோதிய இடத்தையும் அதனால் ஏற்பட்ட பள்ளத்தையும் நாசாவில் இருந்து அமெச்சூர் டெலஸ்கோப் மூலம் கண்காணிக்கிறோம். பூமியில் இருந்து எந்த நாட்டு விஞ்ஞானியும் ‘ஃபால்மர் 200 இன்ச் டெலஸ்கோப்’ மூலம் நிலவைக் கண்காணிக்க முடியும். எனவே, பீதி தேவையில்லை” என்று உறுதியாகக் கூறுகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
“நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை முதலில் உறுதிப்படுத்தியது ‘சந்திரயான் - 1’தான். இப்போது நாசா மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் நிரூபணம் ஆகும்போது இது மிகப்பெரிய கண்டுபிடிப்புத் திட்டமாகக் கருதப்படும்” என்று கூறியுள்ளார் நாசா இயக்குநர் பீட் வொர்டன்.
நிலம், தண்ணீர், காற்று என மூன்றும் இருந்தால் நிலவில் மனிதர்களைக் குடியமர்த்திவிடலாம் என்று பரபரக்கின்றனர் அமெரிக்கர்கள். நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியாகுமா? இதை விரைவிலேயே இந்த ஆய்வு சொல்லிவிடும். எதற்கும் நிலவில் ஃபாளட் பார்த்து வைப்பது நல்லது!
முத்தாரம், 26-10-2009
No comments:
Post a Comment