தமிழ் சினிமாவில் அறிமுகப் படத்தில் தொடங்கி அடுத்தடுத்த படங்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். எண்பதுகளில் ஒருவரை கைநீட்டி கூர வேண்டுமென்றால், நடிகை ரேவதியைத் தவிர வேறு யாரையும் குறிப்பிட முடியாது. அறிமுகமான ‘மண்வாசனை’ படத்தின் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வந்தவர் ரேவதி.
எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிக்கட்டிப் பறந்துகொண்டிருந்தார்கள் நடிகை ஸ்ரீதேவியும் ஸ்ரீபிரியாவும். அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே ஸ்ரீதேவியின் முழு கவனமும் இந்திக்குத் திரும்பிவிட, இன்னொரு நடிகையான ஸ்ரீபிரியாவுக்குப் பட வாய்ப்புகள் குறைந்துகொண்டிருந்த காலம். அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை ராதிகா, அம்பிகா, ராதா போன்றோர் நிரப்ப முயன்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு இணைந்தார் நடிகை ரேவதி. அவர்களிலிருந்து மாறுபட்டு தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தார். அந்தக் கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் தந்த அமோக ஆதரவால், தமிழில் தனக்கென ஓர் இடத்தை அழுத்தமாகப் பதித்தவர் ரேவதி.
கோலோச்சிய நடிகை
இயக்குநர் பாரதிராஜாவால் 1983-ம் ஆண்டில் ‘மண்வாசனை’ படத்தின் மூலம் ரேவதி அறிமுகமானபோது அவரை ஓர் அசல் தெற்கத்தி பெண் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள். ‘முத்துபேச்சி’ என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பான கிராமத்துப் பெண்ணாக மாறிப் போயிருந்தார். முதல் பாகத்தில் பழமொழி பேசி துடுக்குத்தனமாகவும் இரண்டாம் பாகத்தில் தாய் மாமனுக்காகக் காத்திருந்து ஏமாறும் பெண்ணாகவும் தேர்ந்த நடிப்பை ரேவதி வழங்கியிருந்தார். முதல் படமே தமிழில் அவருக்கு அமர்க்களமான
வரவேற்பை பெற்றுதந்தது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த மூன்று ஆண்டுகள் தமிழ் சினிமாவின் இளவரசியாக கோலோச்சினார் ரேவதி. அறிமுகமான புதிதிலேயே அழுத்தமான கதைக் களங்கள் அமைவதெல்லாம் குறிஞ்சிப் பூ ரகம்தான். ரேவதிக்கு அப்படி அமைந்ததை அதிர்ஷ்டம் என்று சொல்லிவிட முடியாது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவர் மாறிக்கொண்டதும், அந்தக் கதாபாத்திரமாகவே ஜொலித்ததுமே காரணம். அந்த வகையில் தொடக்கக் காலத்தில் ரேவதி நடித்த ‘பொண்ணு பிடிச்சிருக்கு’, ‘கை கொடுக்கும் கை’, ‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘கன்னி ராசி’, ‘செல்வி’, ‘உதயகீதம்’, ‘பகல் நிலவு’, ‘குங்குமச்சிமிழ்’, ‘லட்சுமி வந்தாச்சி’ போன்ற படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாகக் கொண்டுபோய் சேர்ந்தன.
அழுத்தமான கதைகள்
‘கை கொடுக்கும் கை’ படத்தில் கண் தெரியாத பெண்ணாகவும் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் கணவனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் விதவையாகும் பெண்ணாகவும், ‘புதுமைப்பெண்’ படத்தில் சிறைக்குச் சென்ற கணவனை மீட்கப் போராடும் பெண்ணாகவும்; தன்னை சந்தேகப்படும் கணவனை தூக்கியெறிந்து செல்லும் புரட்சிப் பெண்ணாகவும் அவர் ஏற்ற அழுத்தமான கதாபாத்திரங்கள் அவரை ஊரெங்கும் பேச வைத்தன. ‘குங்குமச்சிமிழ்’ படத்தில் வரதட்சனை கொடுக்க முடியாமல் திருமணம் தடைப்பட்ட பெண்ணாகவும், ‘ஆண் பாவம்’ படத்தில் திருமணம் தடைப்பட்டதால் கிணற்றில் விழுந்து ஊமையான பெண்ணாகவும் ‘உதயகீதம்’ படத்தில் அண்ணன் சாவுக்கு பழி வாங்கத் துடிக்கும் பெண்ணாகவும் ‘லட்சுமி வந்தாச்சு’ படத்தில் தனக்கு வந்திருக்கும் நோயை வீட்டில் யாருக்கும் சொல்மாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணாக இயல்பாக நடித்து பெண்களின் மனதிலும் பசை போட்டு
அமர்ந்தார்.
ரேவதியின் படம் என்றாலே குடும்பத்தினருடன் பார்க்கும் படமாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு குடும்பக் கதாபாத்திரங்கள் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்தின. அந்தக் காலகட்டத்தில் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு ரேவதி ரசிகர்களைச் சம்பாதித்திருந்தார். அப்போது சினிமா போஸ்டர்களில் ரேவதியின் படம் பெரியதாகப் போட்டு விளம்பரம் செய்த நிகழ்வுகளும் உண்டு. பெண்களை ஈர்ப்பதற்காக ரேவதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. குறிப்பாக ஏ.வி.எம். தயாரிப்பில் வெளியான ‘புதுமைப்பெண்’ படத்தில் ரேவதியின் படத்தை மட்டும் பிரதானமாகப் பிரசுரித்ததை உதாரணமாகச் சொல்லலாம்.
பொருந்திய பாத்திரங்கள்
வெறுமனே குடும்ப பாங்கான பெண்ணாக மட்டும் ரசிகர்களைக் கவரவில்லை ரேவதி. துடுக்குத்தனமான, மாடர்ன் பெண் கதாபாத்திரங்களுக்கும் பெயர்போனவர் ரேவதி. கிராமத்து கதாபாத்திரங்களைப் போலவே சுட்டித்தனமான பாத்திரங்களும் மாடர்ன் பெண் பாத்திரங்களும் அவருக்கு இயல்பாகவே பொருந்தின. ‘ஒரு கைதியின் டைரி’, ‘புன்னகை மன்னன்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘பகல் நிலவு’, போன்ற படங்களில் அவர் துடுக்குத்தனத்தை ரசிக்காதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
‘மௌன ராகம்’ படம் பெருநகரப் புற வாழ்க்கைப் பின்னணியோடு அழகியலையும் கலந்து சொன்ன அற்புதமான காதல் படம். திருமண பந்தத்துக்குள் வந்த பிறகு இறந்துபோன காதலனை மறக்கமுடியாமல், தனக்காக காத்திருக்கும் கணவனையும் ஏற்க முடியாமல் வாழும் அந்தக் கதாபாத்திரத்தை தமிழ் மக்கள் ரசித்தார்கள். இந்தக் கதாபாத்திரத்தில் ரேவதியைத் தவிர்த்து வேறு யாரையாவது நினைத்து பார்க்க முடியுமா?
முதல் மூன்றாண்டுகளில் நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்றாலே இயக்குநர்கள் ரேவதியைத்தான் ‘டிக்’ செய்தார்கள். குறுகிய காலத்தில் நல்ல கதாபாத்திரங்களை அதிகமாக நடித்த நடிகைகளின் பட்டியலில் சாவித்திரிக்கு பிறகு ரேவதிதான் அந்த இடத்தை பிடித்தார். ரேவதி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்தக் காலகட்டத்தில் சிறந்த விளங்கிய இயக்குநர்கள் மணிரத்னம், ஆர். சுந்தர்ராஜன், ரங்கராஜன்; நடிகர்கள் கமலஹாசன், பிரபு, கார்த்திக், சுரேஷ், மோகன் போன்ற முன்னணி நடிகர்களின் விருப்பத் தேர்வாக ரேவதியே இருந்தார். சின்னத் தாயாரிப்பாளர்கள் முதல் பெரிய தயாரிப்பாளர்கள்வரை ரேவதியின் தேதிகளுக்காகக் காத்திருந்தார்கள்.
திருமணத்துக்குப் பிறகு...
1983-ம் ஆண்டு தொடங்கி 1987வரை தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருந்த வேளையில், ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனனை ரேவதி காதல் திருமணம் செய்துகொண்டார். திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போது ஒரு நடிகை திருமணத்தைப் பற்றி யோசிப்பதை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், ரேவதி அதைத் துணிச்சலாகச் செய்தார். அவருடைய திருமணத்தால் ஏற்பட்ட இடைவெளி, தமிழ்த் திரையுலகில் அவரது இடத்தை சிறிது அசைத்துப் பார்த்தது.
ரேவதியின் திரையுலக வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என்று எல்லோரும் நினைத்த வேளையில். ‘கிராமத்து மின்னல்’ என்ற படம் மூலம் மீண்டும் மறு அவதாரம் எடுத்தார். அதன்பிறகு 1989-ம் ஆண்டில் ‘உத்தமபுருஷன்’, ‘இதயதாமரை’, ‘அரங்கேற்றவேளை’ என ரேவதியின் சினிமா பயணம் மீண்டும் வேகம் பிடித்தது. ‘அரங்கேற்றவேளை’யில் அவருடைய வழக்கமான சுட்டித்தனமான கதாபாத்திரமும் பிரபுடன் சேர்ந்து செய்த காமெடியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. 1990-ம் ஆண்டில் வெளியான ‘கிழக்கு வாசல்’ படம் நடிகர் கார்த்திக்கு மட்டுமல்ல, ரேவதிக்கும் திருப்புமுனையாக அமைந்தது. ‘தாயம்மா’ என்ற பாத்திரத்தில் விருப்பமில்லாமல் தாசியாகப் போகும் ஒரு பெண்ணின் வேதனையை யதார்த்தமாகப் பதிவு செய்திருந்தார் ரேவதி. இந்தப் படம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் அவருக்குப் பெற்றுதந்தது. அதே ஆண்டில் வெளியான ‘அஞ்சலி’ படமும் ரேவதியின் நடிப்புக்குத் தீனிப் போட்டது. மனவளர்ச்சிகுன்றிய ஒரு குழந்தையின் தாயாகத் தேர்ந்த நடிப்பை
வழங்கியிருந்தார்.
குறையாத முக்கியத்துவம்
1992-ம் ஆண்டில் வெளியான ‘தேவர் மகன்’ படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்றார் ரேவதி. இந்தப் படத்தில் ‘பஞ்சவர்ணம்’ கதாபாத்திரத்தில் நடிகை மீனாவுக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெகுளித்தனமான அந்தக் கதாபாத்திரம் அவருக்கு பொருந்தாமல் போகவே, ரேவதியை கமல் அழைத்தார். கமலின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் ரேவதி அந்தப் படத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். ‘வெறும் காத்துதான் வருது..’ என்ற வசனம் இருபத்தை ஆண்டுகள் கழித்து இன்றும் பேசப்படுவதிலிருந்து அந்தக் கதாபாத்திரத்தின் வீச்சை அறியலாம்.
தமிழ்த் திரையுலகில் பத்தாண்டுகளைக் கடந்த பிறகும் ரேவதிக்கான முக்கியத்துவம் குறையாமல் இருந்ததை அவருக்கான கவுரவமாகச் சொல்லாம். ஏனென்றால், அப்போதும் அவருக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்துகொண்டுதான் இருந்தன. ‘மறுபடியும்’, ‘பிரியங்கா’, ‘அவதாரம்’, ‘தொட்டாசிணுங்கி’, ‘தலைமுறை’ போன்ற படங்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இரண்டாயிரமாண்டுக்கு பிறகு தன் வயதுக்கேற்ற படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்ல, அவரது தாய் மொழியான மலையாளளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் கணிசமாக நடித்திருக்கிறார்.
இயக்குநராக அவதாரம்
ரேவதிக்கு சினிமா இயக்கத்தின் மீதும் தீராக் காதல் இருந்தது. ‘மித்ரு மை ஃபிரெண்ட்’, ‘பிர் மிலேங்கே’, ‘கேரளா கஃபே’, ‘மும்பை கட்டிங்’ என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நான்கு படங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இயக்கியவை. இதுவரை தமிழ் படத்தை அவர் இயக்காதது ஒரு பெரும் குறைதான். 1990-கள் தொடங்கி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் ரேவதி நடித்திருக்கிறார். தற்போது சன் டி.வி.யில் ‘அழகு’ என்ற மெகா தொடர் மூலம் வீட்டு வரவேற்பரைக்கே வந்துகொண்டிருக்கிறார்.
இந்திய நடிகைகளில் யதார்த்தத்துக்கு மிக நெருக்கமாக எல்லாக் கதாபாத்திரங்களிலும் ஜொலித்தவர் ரேவதி. மென்மையாகவும் அதே வேளையில் வலிமையாகவும் தனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களில் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி சினிமா உலகில் அபாரமாக வெளிப்பட்டவர். இதுபோன்ற நடிகைகள் எல்லாக் காலத்துக்கும் கிடைத்துவிட மாட்டார்கள்; அபூர்வமாகவே கிடைப்பார்கள். அந்த வகையில் ரேவதி ஓர் அபூர்வ நடிகை!
- இந்து தமிழ் தீபாவளி மலர், 2018

![]() |
புதுமைப் பெண் |

கை கொடுக்கும் கை |

புன்னகை மன்னன் |